பந்தாடும் பாஜக.. ஆப்பு வைக்கும் திமுக! சுத்துப்போட்ட ஆப்போனன்ட்..திக்கு தெரியாமல் திணறும் தவெக விஜய்
சென்னை: கட்சி நிகழ்வுகளுக்கு அரசால் கடும் கட்டுப்பாடுகள், கடைசி படமான ஜனநாயகனுக்கு எழுந்த சிக்கல் என சினிமா மற்றும் அரசியல் ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது கடும் அப்செட்டில் இருப்பதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போதே இப்படி என்றால் வரும் நாட்களில் இன்னும் அதிகமான சிக்கல்கள் விஜய்க்கு வரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டில், சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு மிகப் பெரிய வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என விஜய் உறுதியான குரலில் பேசியிருந்தார்.

அந்த மாநாடு அவரது அரசியல் பயணத்தின் தொடக்கமாகவே பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற மாநாட்டிலும் தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்திய விஜய், தமிழக அரசியலில் திமுக எங்களின் அரசியல் எதிரி என்றும், பாஜக எங்களின் கொள்கை எதிரி என்றும் வெளிப்படையாக அறிவித்தார்.
விஜய் தவெக சிக்கல்
தமிழகத்தில் ஆளும் திமுகவுடன் தான் தவெகவுக்கு நேரடி போட்டி என்றும், தவெக தமிழகத்தின் இரண்டாவது பெரிய அரசியல் சக்தி என்றும் கூறி வந்தார். திமுகவைப் போலவே மத்திய பாஜக அரசையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். தேர்தலை சந்திப்பதற்கு முன்பே அதிமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளிவிட்டதுபோன்ற தோற்றத்தில் விஜய் பேசி வந்த நிலையில், அவரது அரசியல் பயணத்தில் தற்போது எதிர்பாராத முட்டுக்கட்டைகள் உருவாகியுள்ளன. பொங்கலுக்குப் பிறகு முழுவீச்சில் பிரசார பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்த விஜய்க்கு, கரூர் உயிரிழப்பு வழக்கில் சிபிஐ விசாரணை என்ற பெயரில் டெல்லிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நாள் முழுவதும் சிபிஐ அலுவலகத்தில் வைத்து மணிக்கணக்கில் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி அடுத்த நாள் விசாரணையைத் தவிர்த்த நிலையில், மீண்டும் ஜனவரி 19-ம் தேதி ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. தை மாதம் தொடங்கியதும் தீவிர பிரசாரத்தில் இறங்கலாம் என நினைத்திருந்த விஜய், இந்த நிலைமையால் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், த.வெ.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற விஜயின் திட்டமும் தற்போது நிறைவேறாத சூழலில் உள்ளது. சிறு கட்சிகள் தவிர பெரிய அரசியல் கட்சிகள் எதுவும் த.வெ.க.வை நோக்கி வராததால், கூட்டணி அரசியல் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படுமோ என்ற கவலையும் கட்சிக்குள் நிலவுகிறது.
ஜனநாயகன் படம் பிரச்சனை
மேலும், விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படமும் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது. உச்ச நீதிமன்றம் வரை சென்றும் சாதகமான தீர்ப்பு கிடைக்காததால், தற்போது சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது விஜய்க்கு இன்னொரு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. த.வெ.க. நிர்வாகிகள் சிலர் கூறுவதாவது, ஆரம்பத்தில் திமுக அரசு மட்டுமே த.வெ.க.வுக்கு எதிராக செயல்படும் என விஜய் நினைத்ததாக கூறப்படுகிறது.
விஜய் அரசியல் தடைகள்
கரூர் உயிரிழப்பு சம்பவத்தை காரணமாக்கி த.வெ.க. கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதும், அரசையும் திமுகவையும் விமர்சித்த கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும், கட்சி செயல்பாடுகளை கட்டுப்படுத்தவே என அவர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், அதிமுகவை குறைத்து மதித்ததோடு, திமுக அரசுக்கு இணையாக மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்ததால், விஜய் மீது பாஜக தேசிய தலைமையும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் தனி அணியாக களமிறங்கினால் அது திமுகவுக்கு சாதகமாக முடியும் என பாஜக கருதுவதாகவும், அதனால் விஜயின் அரசியல் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
தவெக கூட்டணி நெருக்கடி
மேலும், விஜயை முன்வைத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கூடுதல் சீட்களும், ஆட்சி அதிகாரத்தில் பங்கும் கோரி அழுத்தம் கொடுக்கக் கூடும் என்ற அச்சமும் பாஜக தரப்புக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தமிழக காங்கிரஸ் மீண்டும் அரசியல் ரீதியாக பலம் பெறக் கூடாது என்ற நோக்கில், 'ஜனநாயகன்' படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் வழியாக தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக த.வெ.க. தரப்பினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எதிர்பார்த்த கூட்டணி அமையாதது, கடைசி படம் திட்டமிட்டபடி வெளியாகாதது, பிரசாரப் பயணங்கள் தொடர்ந்து தடைபடுவது என பல்வேறு காரணங்கள் ஒரே நேரத்தில் விஜயை சூழ்ந்துள்ளன. இவை அனைத்திற்கும் பாஜகவே மறைமுகமாக பின்புலமாக இருப்பதாக த.வெ.க. நிர்வாகிகள் கருதுகின்றனர்.
-
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
விஜய்யின் சொத்து விவரம் வெளியானது.. ரூ.400+ கோடி சொத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.370+ கோடி சேமிப்பு -
சென்னையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்புகிறார் -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
Vijay: "எனக்காக விட்டு கொடுத்து இருக்காரு" கட்டி பிடித்து விஜய் சொன்ன அந்த வார்த்தை! யார் இந்த சிவா? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications