"ஸ" ஆரியம்.. "ஸ்"டாலின் என்றால் திராவிடம்.. ஆஹா புதிய அகராதி.. எஸ்.ஆர். சேகர் கிண்டல்
சென்னை: ஸ என்றால் ஆரியம் , ஸ்டாலினில் வரும் ஸ் என்றால்... புதிய அகராதி என பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் ட்வீட் போட்டுள்ளார்.
தமிழ்த்தாயின் படத்தை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் அதில் தமிழணங்கு என குறிப்பிட்டிருந்தார். இந்தி திணிப்பை மத்திய அரசு கொண்டு வரும் போதெல்லாம் தமிழணங்கு படத்தை வைத்து பலர் பதிலடி கொடுத்து வந்தனர்.
எல்லாரையும் போல் இந்தி திணிப்பை ஒப்புக் கொள்ள மாட்டோம் என தமிழக பாஜகவும் தெரிவித்தது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே என கூறி தமிழக பாஜக தலைவர் ஒரு ட்வீட்டை போட்டிருந்தார்.

காவி பின்புலம்
அதில் அவர் காவி பின்புலத்தில் தமிழன்னையின் படத்தை வரைந்து அதை சுற்றி தமிழ் எழுத்துகளை எழுதியிருந்தார். இதில் வட எழுத்தான ஸ மறைந்திருப்பதை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டுபிடித்து அதை வட்டமிட்டு காட்டினார். மேலும் அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துகளுடன் ஸ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டிவிட்டது.

வள்ளுவர் அடையாளம்
இதைத்தான் "தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்" என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளிக்கையில் தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள "ஸ" என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன்.

அண்ணாமலை ட்வீட்
"தமிழ் தமிழ்" என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது! "ஸ"வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்! என குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டாலின் காரண பெயர்
இதற்கு நெட்டிசன்கள் பலர் ஸ்டாலினின் பெயர் காரண பெயர் என்பது பல்வேறு தருணங்களில் விளக்கயாகிவிட்டது. அவரது பெயர் தமிழ் பெயர் இல்லை என நெட்டிசன்களும் திமுகவினரும் பாஜக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர். இவ்வாறாக இந்த விவாதம் ஓடி கொண்டிருக்கிறது.

எஸ் ஆர் சேகர் ட்வீட்
இந்த நிலையில் பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் தனது ட்விட்டரில் கூறுகையில் "ஸ" என்றால் ஆரியம்,
"ஸ்"டாலின் என்றால் திராவிடம்.
#புதிய_அகராதி என குறிப்பிட்டிருந்தார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications