ஈரோடு இடைத்தேர்தல்.. பாஜக முக்கிய புள்ளியை தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி.. திமுகவில் இணைப்பு!

பாஜகவின் முக்கிய நிர்வாகியான விநாயகமூர்த்தி திமுகவில் இணைந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவின் மாநில பட்டியலின பிரிவு பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அதேபோல் ஈரோடு மாவட்ட பாஜக நிர்வாகிகளும் திமுகவில் இணைந்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை தங்கள் கட்சிகளில் இணைக்க முக்கிய கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவின் மாநில பட்டியலின பிரிவு பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஈரோடு மாவட்ட பாஜக இளைஞர் அணிச் செயலாளர் வி.வெங்கடேஷ், மதுரைவீரன் மக்கள் இளைஞர் அணிச் செயலாளர் பழ.வீரக்குமார் ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைப்பு

திமுகவில் இணைப்பு

இதுகுறித்து என்.விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலாளராக பணியாற்றி வந்தேன். தற்போது, தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் காப்பாற்றுகிற தலைவராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அவர் தலைமையின்கீழ் பணியாற்றவும் திமுகவில் இணைந்திருக்கிறேன்.

மதுரை வீரன் கட்சி

மதுரை வீரன் கட்சி

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, எங்கள் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு 2009ல் வழங்கியதால், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகிறார்கள். அத்துடன், அரசுப் பணியிலும் பணியாற்றி வருகிறார்கள்.
நான், "மதுரை வீரன் மக்கள் கட்சி" என்ற கட்சியை நடத்தி வருகிறன்.

3 லட்சம் உறுப்பினர்கள்

3 லட்சம் உறுப்பினர்கள்

அதில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உறுப்பினராக உள்ளார்கள். அவர்களையும் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைத்து பணியாற்றுவதற்கும், இணைப்பு விழா நடத்துவதற்கும் ஏற்பாடு செய்து வருகிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில், எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.

இடைத்தேர்தலில் வெற்றி

இடைத்தேர்தலில் வெற்றி

இவர்கள் அத்தனை பேரையும், நடைபெற உள்ள இடைத்தேர்தலில், முதலமைச்சர் ஆசிபெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களிப்பார்கள். இத்தொகுதி முழுவதும் முழு வீச்சுடன், தீவிர களப்பணியாற்றி மாபெரும் வெற்றியை பெற வைத்து, கழகத் தலைவர் கரத்தில் ஒப்படைப்பேன் என்று இந்நேரத்தில் உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 செந்தில் பாலாஜி மூவ்

செந்தில் பாலாஜி மூவ்

விநாயகமூர்த்தி இணைப்பின் போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, செய்தித் தொடர்புத் தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+