என்டிஏ கூட்டணியில் அதிமுக.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் அமித்ஷா!
சென்னை: 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய இடத்தில் பாஜக இருக்கிறது. இந்நிலையில், இன்னும் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்திக்கிறார். இதில் என்டிஏ கூட்டணியில் அதிமுக இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சந்திப்பின்போது கூட்டணி பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அனேகமாக சந்திப்பு பின்னர் செய்தியாளர்களை சந்தித் கூட்டணி இறுதியாகிவிட்டது என்று இரு தலைவரும் சொல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் பேசப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக களம் கண்டது. தேர்தலில் இந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் மத்தியில், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்கிற ஒரு கருத்து தோன்றியிருந்தது. தொண்டர்களின் உணர்வுக்கு தலைவர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இப்படி இருக்கையில்தான் அண்ணாமலையில் பேச்சு அதிமுக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
முன்னாள் முதல்வர் அண்ணாவை பற்றி, அண்ணாமலை பேசியிருந்தது அதிமுகவினர் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கெனவே தேர்தல் தோல்வி, தொண்டர்களின் குமுறல் ஒரு பக்கம், போதாத குறைக்கு அண்ணாமலையில் பேச்சுவேற.. இதை அத்தனையும் பார்த்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக கூறினார். இப்படி இருக்கையில் இன்று அமித்ஷா, எடப்பாடி சந்திப்பு நடந்திருக்கிறது.
இந்த சந்திப்புமே ஒரு நிபந்தனையுடன்தான் நடந்தது. அண்ணா பற்றி அண்ணாமலை பேசியதை நாங்கள் மறக்க மாட்டேம். மட்டுமல்லாது ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விக்கு அதிமுக பிரிந்து சென்றதுதான் காரணம் என்றும் கூட அவர் பேசியிருக்கிறார். மட்டுமல்லாது மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதிவியை ராஜினாமா செய்வதாகவும் அண்ணாமலை பேசியிருக்கிறார். ஆக பாஜக மாிநல தலைவர் தேர்தலிலிருந்து அண்ணாமலை விலகிக்கொண்டால்தான் சந்திப்பு நிகழும் என்று எடப்பாடி தரப்பில் அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட்டது.
இன்று மதியம் 12 மணியளவில் அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தப்படும், அதை தொடர்ந்து கூட்டணி பற்றி கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்து. ஆனால், புதிய பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் விருப்ப மனு தாக்கல் மதியம் 2 மணிக்கு தொடங்கி 6 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விருப்பமனு தாக்கல் நேரத்தில் அண்ணாமலை வராமல் இருந்தால் போதும். இதுதான் எடப்பாடியின் கணக்கு.
அதேபோல அண்ணாமலை விலகிக்கொண்டு, நயினார் நாகேந்திரனுக்கு சப்போர்ட் செய்தார். நயினார் மட்டும் விருப்ப மனுவை தாக்கல் செய்ய, வேறு யாரும் மனுவை தாக்கல் செய்யாமல் இருந்தனர். இப்படியாக விருப்பமனு தாக்கலுக்கான கால அவகாசமும் நிறைவடைந்தது. இதனையடுத்துதான் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்தார். அதன் பின்னரே கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications