உண்மைக்கும் திமுகவினருக்கும் உள்ள உறவு.. கீரிக்கும் பாம்பிற்குமான உறவு.. எச்.ராஜா பொளேர்

திமுகவை சாடி எச்.ராஜா ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி கரெக்ட்டாதான் பேசியிருக்கிறார் என்று பேட்டிகள், ட்வீட்களில் பாராட்டு தெரிவித்த, எச்.ராஜா, "உண்மைக்கும் திமுகவினருக்கும் உள்ள உறவு என்பது கீரிக்கும் பாம்பிற்குமான உறவு போன்றது" என்று சாடியுள்ளார்.

நேற்று ரஜினி சிஏஏ குறித்த பேச்சானது பல தரப்பிலும் விவாத பொருளாக உருமாறி உள்ளது.. ரஜினியின் பேச்சு குறித்து எச்.ராஜாவிடம் தனியார் டிவி ஒன்று பேட்டி எடுத்திருந்தது.

அதில் அவர் பேசியபோது, பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், ஏதேனும் ஒரு குடிமகனுக்கு கூட குடியுரிமை பறிக்கப்பட போகிறது என்பதை சுட்டிக்காட்டுங்கள் பார்ப்போம்... எந்த குடிமகனுக்கும் குடியுரிமை பறிக்கப்படாது என்று சொல்லி உள்ளனர்..

குடியுரிமை

குடியுரிமை

சிஏஏ சட்டப்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை தரப்பட்டிருக்கிறது. யாரின் குடியுரிமையும் பறிக்கப்படவில்லை.. பிரிவினைக்கு முந்தைய நிலைமையைக் கொண்டு வருவதற்கான சதித்திட்டத்தை எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் வாயிலாக மேற்கொள்கின்றனர்.

குடிமுழுகி போச்சா?

குடிமுழுகி போச்சா?

இதுல என்ன குடி முழுகி போச்சு.. நாடு பூராவும் போராட்டம்ங்கிறது எள்ளு முனையளவு கூட நியாயம் இல்லை.. அநாவசியமானது.. அரசியல் கட்சிகள் தூண்டுகின்றன.. இவங்களா இதை மக்கள் போராட்டம் என்று சொல்கிறார்கள்.. ஸ்டாலின் வீடு வீடா கையெழுத்து போட சொல்லி போய்க்கிட்டு இருக்காரே, அது என்ன மக்கள் போராட்டமா? அரசியல் கட்சிகள் தூண்டி விடுகிற போராட்டம்.

பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

ஆனால் தக்க தருணத்தில் சரியான ஒரு புரிதலோடு நண்பர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்" என்றார். இந்த வீடியோவை தன் ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தார் எச்.ராஜா.. இதையடுத்து "நண்பர் ரஜினிகாந்தின் கருத்து பாராட்டுக்குரியது" என்று தெரிவித்திருந்தார். தனி பேட்டி, தனி ட்வீட் மூலம் ரஜினியை பாராட்டிய எச்.ராஜா திமுகவை சாடி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

கீரி - பாம்பு

கீரி - பாம்பு

அதில், "உண்மைக்கும் திமுக வினருக்கும் உள்ள உறவு என்பது கீரிக்கும் பாம்பிற்குமான உறவு போன்றது" என்று தெரிவித்து உள்ளார். எச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு கீழே பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர், "கீரிக்கும் பாம்புக்குமாவது சண்டை என்ற உறவு உண்டு. திமுகவிற்கும் உண்மைக்கும் உள்ள உறவு தண்ணீருக்கும் எண்ணெய்க்குமானது" என்று எச்.ராஜாவுக்கு ஆதரவான கமெண்ட்கள் விழுகின்றன.

அதே சமயம், "பொதுத்தொண்டுக்கும் பாஜக வினருக்கும் உள்ள உறவு என்பது கீரிக்கும் பாம்பிற்குமான உறவு போன்றது" என்ற எதிர்ப்பு கமெண்ட்களும் வந்தபடியே இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+