கங்கிராஜுலேஷன்ஸ்.. எச். ராஜா தாத்தா ஆயிட்டார்.. "முருகன்" பெயரை வைக்க சொல்லி நெட்டிசன்கள் அனத்தல்!
பேரன் பிறந்துள்ளதாக எச்.ராஜா ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: எச்.ராஜா ட்விட்டர் பக்கத்தில் இன்னைக்குதான் நல்ல நல்ல வார்த்தைகளுடன் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.. அதற்கு காரணம், எச்.ராஜா தாத்தா ஆயிட்டாராம்.. பேரன் பிறந்திருக்கானாம்.. சுகப்பிரசவம் ஆகி உள்ளதாம்.. தாயும், சேயும் நல்லா இருக்காங்க என்று தெரிவித்துள்ளார்.. இதற்குதான் நம்ம ட்விட்டர்வாசிகள் திரண்டு வந்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
Recommended Video
பாஜகவின் மூத்த தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான எச்.ராஜா என்றாலே தமிழகத்தில் ஃபேமஸ்.. அதிலும் இவரது ட்விட்டர் பக்கம் என்றாலே ஹாட் பக்கம்தான்!

எந்த ட்வீட் போட்டாலும், அதற்கு எடக்கு மடக்காகவும், விமர்சித்தும், திட்டியும், வரவேற்றும், பாராட்டியும், என பலதரப்பட்ட கமெண்ட்கள் குவிந்தபடியே இருக்கும். எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் கடந்து, எச்.ராஜா தன் விருப்பப்படியே ட்வீட் போட்டு வருவார்.
இன்று ஒரு நல்ல செய்தியை ஷேர் செய்திருக்கிறார்.. அதில், "இறைவன் அருளால் நேற்று மாலை 8.29 க்கு எனக்கு பேரன் பிறந்துள்ளான். சுகப்பிரசவம். தாயும் சேயும் நலம்" என்று கூறியுள்ளார்... இதற்கு ட்விட்டர்வாசிகள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

"வாழ்த்துக்கள்... அந்த குழந்தையை உங்களை போல் வளர்த்து விடாமல், நன்றாக ஒழுக்கமாக வளர்க்கவும் என்றும், வாழ்த்துக்கள் ஜி... நல்ல, அழகான ஸம்ஸ்க்ருதப் பெயரே வையுங்கள் பாரம்பரியப்படி... பேரன் பிறந்த நேரம் கட்சியில் உயர் பதவி உங்களுக்கு உறுதி ஜி" என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்..
"#வரலாறு பேசும்படி மக்கள் மனதில் என்றும் வாழும்படி இருக்க... குழந்தைக்கு #கருணாநிதி என்று பெயர் சூட்டுங்கள்" என்றும், "இப்போது இந்த குழந்தைக்கு வேல்முருகன், பாலமுருகன், முருகவேல், சரவணன் போன்ற முருக கடவுளின் பெயர்களில் ஒன்றை வைக்க எச்.ராஜா போராடி தனது முருக பக்தியை நிரூபிப்பார்" என்றும் கமெண்ட்கள் பதிவாக தவறவில்லை..
இருந்தாலும், வாழ்த்துக்களே எச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தை ஆக்கிரமித்து வருகிறது.. தாத்தாவாக உயர்வு பெற்றுள்ள எச்.ராஜாவுக்கு நாமும் நம் வாழ்த்தை சொல்வோம்.. !
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications