Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெத்திப்பொட்டில் அடிச்ச மாதிரி.. இதுதான் அண்ணாமலை அட்ரஸ்.. திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு பாஜக பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : 2 ஆண்டு அரசியல் அனுபவமே இருந்தாலும், உங்களைப் போன்ற 60 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவரை இன்று தஞ்சாவூர் வீதியில் இறங்கி கொதிக்க வைத்துள்ளாரே, அதுவே எங்கள் தலைவரின் அரசியல் அறிவு என அண்ணாமலையை விமர்சித்த திமுக எம்.பி டி.ஆர்.பாலுவுக்கு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதில் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ஆம் தேதி திமுக ஃபைல்ஸ் என்கிற பெயரில் திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், டிஆர் பாலு உள்ளிட்டோர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை டி.ஆர்.பாலு பல நிறுவனங்களில் இயக்குநராக இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றார்.

 BJP sg suryah reply to dmk mp tr balu for criticizing annamalai

அண்ணாமலையை எச்சரித்த பாலு : இதுதொடர்பாகப் பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு, "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மீது அவதூறு பரப்பும் வகையில் சொத்து சேர்த்ததாக கூறி உள்ளார். 21 கம்பெனிகள் என்னுடையது என்று கூறி உள்ளார். அதில் 3 நிறுவனங்களில் மட்டுமே பங்குதாரராக உள்ளேன். எனக்கு சொந்தமாக எந்த நிறுவனமும் கிடையாது. எந்த கம்பெனியிலும் நான் டைரக்டர் கிடையாது. நான் தேர்தலில் நிற்கும் போதே எனது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளேன். என் மீது அவதூறு பரப்பிய அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். அவரை சும்மா விடமாட்டேன். கிரிமினல் வழக்கு தொடர்வேன்" என்றார்.

மேலும், என் மானத்துக்கு சவாலாக யாராவது பேசி என் காலைத் தொட்டால் அவர் தலையை மிதிக்காமல் விடமாட்டேன், இது என்னுடைய குணம். அரசியல் அறிவே இல்லாத, அட்ரஸ் இல்லாத ஒரு சாதாரண அண்ணாமலையை பற்றி நாம் பேசுவது சரியில்லை. நானே பேசக்கூடாது. ஆனால் பத்தாயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக என்னை பற்றி அவர் பேசி உள்ளார். மான, ரோஷம் இருந்தால், உண்மையான ஐ.பி.எஸ் அதிகரியாக இருந்திருந்தால் அண்ணாமலை நேராக நீதிமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும் எனச் சாடினார்.

பாஜக பதிலடி : இந்நிலையில், பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா டி.ஆர்.பாலுவுக்கு பதில் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "முதியவர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு! 1959-ல் தி.மு.க-வில் இணைந்து தற்போது உதயநிதியைக் கொண்டாடும் ஐயா டி.ஆர்.பாலு அவர்களுக்கு வணக்கம். நீங்கள், அரசியல் அறிவில்லாத, அட்ரஸ் இல்லாத ஒரு சாதாரண அண்ணாமலையைப் பற்றி நாம் பேசுவது சரியில்லை, நானே பேசக் கூடாது என்று பேசியுள்ளீர்கள். எங்கள் மாநில தலைவரை அட்ரஸ் இல்லாத அண்ணாமலை, அரசியல் அறிவில்லாத அண்ணாமலை என தரம் தாழ்ந்து குறிப்பிட்டுள்ளீர்கள்.

தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு அட்ரஸ் உண்டு, அவர் ஒன்பது வருடம் பணியாற்றிய கர்நாடக காவல்துறை அவரது அட்ரஸ். இரண்டு ஆண்டு அரசியல் அனுபவமே இருந்தாலும், உங்களைப்போன்ற 60 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவரை இன்று தஞ்சாவூர் வீதியில் இறங்கி கொதிக்க வைத்துள்ளாரே, அது எங்கள் தலைவரின் அரசியல் அறிவு. பத்தாண்டுகள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் அனுபவம் இல்லாமல் செயல்பட்டு வரும் தி.மு.க அரசுக்கு வழிகாட்டியாக இருக்கிறாரே தலைவர் அண்ணாமலை, அது அவரது அட்ரஸ்.

அண்ணாமலை அட்ரஸ் : முடிவை எடுக்கத் தெரியாமல் திண்டாடி நிற்கும் போதெல்லாம் தி.மு.க அரசை வழிகாட்டி கொண்டு செல்கிறாரே தலைவர் அண்ணாமலை, அது அவரது அரசியல் அறிவு. இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவரை தேசிய பா.ஜ.க மேலிடம் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது என்றால் அதுதான் அவரது அட்ரஸ். சேது சமுத்திரத் திட்டம் ஏன் கூடாது என இத்தனை நாள் வரையில் அரசியல் பேசி வந்தவர்கள் எல்லாம் அத்திட்டத்தில் உள்ள அறிவியல் காரணங்களை விளக்கும் போது, சேது சமுத்திர திட்டம் வந்தால் கனிமொழி, டி.ஆர்.பாலு வைத்திருக்கும் கப்பல் கம்பெனிகள் தான் செழிக்கும் என நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி கூறினாரே அதுதான் தலைவர் அண்ணாமலை அவர்களின் அரசியல் அறிவு.

அந்த கப்பல் கம்பெனி கருத்துக்கு இன்றுவரை விளக்கம் அளிக்காமல் பேசாமல் கப்சிப் என நீங்கள் இருக்கின்றீர்களே, அது தான் தலைவர் அண்ணாமலையின் அட்ரஸ். இப்படி பல அரசியல் அறிவு, அட்ரஸ் வைத்திருக்கும் எங்கள் தலைவர் அண்ணன் அண்ணாமலையை நீங்கள் பொதுவெளியில் தரம்தாழ்ந்து விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு குறைந்தபட்ச தகுதி இருக்கிறதா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன். அரசியலில் மட்டுமல்ல எங்குமே நாம் கொடுப்பது தான் கிடைக்கும். மரியாதையும்! கௌரவமும்! முதியவர் உங்களுக்கு இது புரியும் என நினைக்கிறேன். படபடப்பில் நிதானம் இழக்க வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+