கோவையில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை! திடீரென லோக்சபா தேர்தலில் களமிறங்குவது ஏன்
சென்னை: பாஜகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இருந்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வரும், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் பொதுவாக லோக்சபா தேர்தலில் இரண்டாம் கட்டத்தில் தான் தேர்தல் நடைபெறும். ஆனால், இந்த முறை முதல்கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக ஏற்கனவே கூட்டணி முதல் வேட்பாளர் அறிவிப்பு வரை அத்தனையையும் முடித்துவிட்டது. அதேநேரம் பாஜக அதிமுக இடையே மீண்டும் கூட்டணி உருவாகும் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், அது கைகூடவில்லை. இதையடுத்து பாஜக தலைமையில் பல்வேறு கட்சிகளைக் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், டிடிவி, ஓபிஎஸ் என பலரை பாஜக தங்கள் கூட்டணியில் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே இப்போது பாஜகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 9 தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அதில் சமீபத்தில் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை தென்சென்னையில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நிலையில், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
இதில் முக்கியமாகக் கோவையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என அண்ணாமலை கூறியிருந்தார். இது தொடர்பாகச் செய்தியாளர் கேட்ட கேள்விக்குக் கூட "எனக்கு நிறைய பணிகள் இருக்கின்றன. நான் கட்சி பணிகளை மட்டுமே செய்து வருகிறேன். கோவையில் நல்ல வேட்பாளர்களைப் போட்டியிட வைப்போம்" என்று கூறியிருந்தார்.
இருப்பினும், அதன் பிறகு சில நாட்களிலேயே டெல்லி பாஜக தலைமை அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்று கூறியதாகத் தகவல் வெளியானது. அவர் கரூர் அல்லது கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடலாம் எனச் சொல்லப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இது குறித்துக் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை நேரடியாகப் பதில் அளிக்காமல், "இன்னும் 2-3 நாட்களில் உங்களுக்கான பதில் கிடைக்கும்" என சொல்லிச் சென்றார். இந்தச் சூழலில் தான் அவர் கோவையில் போட்டியிடுகிறார்.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவர் ரஜினி தொடங்கும் அரசியல் கட்சியில் இணையலாம் எனச் சொல்லப்பட்டது. ரஜினி அரசியலுக்கு வராமல் போன நிலையில், அவர் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவராக முதலில் நியமிக்கப்பட்டார். 2021 சட்டசபைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை. அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இரா.இளங்கோவிடம் தோல்வி அடைந்தார்.
2021 சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்நாடு பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அவர் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு அவர் மாநிலத்தில் பாஜகவை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக அவரது என் மண் என் மக்கள் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications