Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குரங்கு, நாய், பேய்.." அரசியல் களத்திலேயே அண்ணாமலை மாதிரி வசைபாட யாரும் இல்லை! கண்டிக்குமா பாஜக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பத்திரிகையாளர்களையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரக்குறைவாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நாள் முதலே, திமுகவுக்கு எதிராக அரசியலிலும், தமிழக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என பரபரப்பாக இயங்கி வருகிறார். மத்திய அரசுக்கு எதிராக திமுகவின் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் அண்ணாமலை உடனுக்குடன் பதில் அளித்து வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பது, பொதுக்கூட்டங்களில் திமுக அரசை விமர்சிப்பது என தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கோவை கார் சிலிண்டர் விபத்து சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.

செந்தில் பாலாஜி விமர்சனம்

செந்தில் பாலாஜி விமர்சனம்

அதில் ராணுவ வீரர் உயிரிழப்பை அரசியலாக்க முயற்சித்த நபர் தான், கோவை கார் வெடிப்பு சம்பவத்தையும் அரசியலாக்குகிறார். தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தான். காவல் துறையினர் விசாரணை அறிக்கை வெளியிடும் முன்பே, விசாரணை தொடர்பான தகவல்களை அண்ணாமலை வெளியிடுகிறார் என்றால் அவரிடம் தாம் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும். அண்ணாமலைக்கு அடிப்படை அரசியலில் பக்குவம் இல்லை, புரிதலும் இல்லை என்று விமர்சித்திருந்தார்.

தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம்

தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் விமர்சனம் குறித்து அண்ணாமலையிடம் கடலூரில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை, மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள். நான் என்ன சொன்னேன். நீங்கள் சாப்பிடுங்கள். நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று தானே சொன்னேன். இப்படி வந்ததும் ஊரில் நாயி, பேயி, சாராயம் விக்கிறவன் சொல்றதை எல்லாம் நான் கேட்டு அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? நகருங்க என்று செய்தியாளர்களையும், அமைச்சர் செந்தில் பாலாஜியையும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார்.

பிடிஆர் சம்பவம்

பிடிஆர் சம்பவம்

ஏற்கனவே மதுரை விமான நிலையத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பேசுபொருளானது. அதேபோல் நிதியமைச்சரவை செருப்புடன் ஒப்பிட்டு பேசியது பலரையும் முகம் சுழிக்க வைத்தது. சில மாதங்களுக்கு முன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த அண்ணாமலை, தற்போது மீண்டும் பழையபடி செந்தில் பாலாஜியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

அண்ணாமலையின் தரக்குறைவான விமர்சனம்

அண்ணாமலையின் தரக்குறைவான விமர்சனம்

அமைச்சர்களின் செயல்பாடுகளையும், அரசின் திட்டங்களையும் எவ்வளவு தீவிரமாக விமர்சித்தாலும், தமிழக அரசியல் தனி நபர் தாக்குதலுக்கும், தரக்குறைவான வார்த்தைகள் மூலம் விமர்சிப்பதற்கும் இதுவரை யாரும் இடம் கொடுத்ததே இல்லை. அதில் அனைத்து கட்சி அரசியல்வாதிகளும் கவனமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தரக்குறைவான வார்த்தைகள் மூலம் விமர்சிப்பது அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்பி செந்தில் குமார் கண்டனம்

திமுக எம்பி செந்தில் குமார் கண்டனம்

இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் அரசியலை புதிய வீழ்ச்சிக்கு கொண்டு செல்கிறார். பத்திரிகையாளர்கள், அமைச்சர்களை அவர் பேசும் தரக்குறைவான வார்த்தை வன்மையாக கண்டிக்கத்தக்கது. கருத்தியல் வேறுபாடுகள், அரசியல் விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் தரம் தாழ்ந்து மூன்றாம் நிலை விமர்சனங்கள் அல்ல என்று பதிவிட்டுள்ளார். அண்ணாமலையின் பேச்சிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+