Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடுபட்ட முக்கிய அஜெண்டா.. நாள் குறித்த அண்ணாமலை! களத்தில் தயார் நிலையில் விநாயகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டசபையில் பாஜக நுழைந்துள்ள நிலையில், இந்த வெற்றியை நாடாளுமன்றத்திற்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள புதிய திட்டத்தையும் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானதாகும். ஏற்கெனவே இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் கட்சி ஜெயித்திருந்தாலும் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் பாஜக இருக்கிறது. ஏனெனில் 2025ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா வருகிறது. தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதே சில மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கிடைக்காமல் நீதிமன்றம் சென்றுதான் அனுமதி வாங்க முடிந்தது.

BJP State President Annamalai formulated a new plan to bring Hindutva politics among the masses

இதே அடுத்த ஆண்டு தேர்தலில் தோற்றுவிட்டால் நிச்சயம் இந்த பேரணியை நடத்த மல்லுக்கட்ட வேண்டியிருக்கும் என்பதால் 2024ம் ஆண்டு தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த தேர்தலில் பாஜக வென்று மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்று முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் எனும் பெருமையை மோடி பெறுவார். அந்த வகையிலும் 2024 நாடாளுமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எனவே புதியதாக கட்சி ஜெயிக்க வாய்ப்புள்ள இடங்களை தேசிய தலைமை சில மாதங்களுக்கு முன்னர் பட்டியல் எடுத்தது. பட்டியலின்படி தமிழ்நாட்டில் 8-9 இடங்களை பாஜக குறிவைத்திருக்கிறது. இந்த இடங்களில் கட்சியை பலப்படுத்துவது, வாங்கு வங்கியை தங்கள் வசப்படுத்துவது என பாஜக தீவிரமாக இறங்கி வேலை பார்த்து வருகிறது. இந்த பணிகளின் ஒரு பகுதியாகதான் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

எல்லாம் ஓகேதான் ஆனால் பாஜகவின் முக்கியமான அஜெண்டாவாக இருக்கும் இந்துத்துவா அரசியல் எங்கே என்று கட்சிக்குள்ளேயே பல நிர்வாகிக்கள் கேள்வியெழுப்பியுள்ளன. ஆனால் இப்போது இதை முன்னிறுத்தினால் சரியாக இருக்காது என்று தொடர்ந்து அண்ணாமலை சமாதானம் கூறி வந்த நிலையில், தற்போது இந்த அஜெண்டாவை எக்ஸிகியூட் செய்து பார்க்க சரியான தருணம் கிடைத்திருக்கிறது என்றும், அதற்கு தயாராக வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் விநாயகர் சதுர்த்தியன்று ஒவ்வொரு பூத்களிலும் பாஜக சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதன் மூலமாக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் தங்கள் இந்துத்துவ கருத்துக்களை எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது. வழக்கமாக விநாயகர் சிலைகளை கரைக்க கொண்டு செல்ல இந்து முன்னணி போன்ற இந்துத்துவா அமைப்புகள்தான் முன்வரும். இந்த முறை அத்துடன் சேர்த்து பாஜகவே நேரடியாக களத்தில் இறங்க திட்டமிட்டிருக்கிறது.

அண்ணாமலையின் முதல்கட்ட யாத்திரை வரும் 22ம் தேதி முடிவடைகிறது. எனவே அதன் பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+