அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்த இலங்கை அரசு! மலையகத் தமிழர்களை கவுரவப்படுத்தும் விழா!
சென்னை: இலங்கையில் மலையகத் தமிழர்களை கவுரவப்படுத்தும் வகையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக சிறப்பு அழைப்பின் பேரில் இலங்கை புறப்பட்டுச் சென்றுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் 1823ஆம் ஆண்டே தமிழர்கள் இலங்கைக்கு சென்றதன் நினைவை போற்றும் வகையில் ''நாம் 200- ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்''என்ற நிகழ்ச்சி இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். அந்த வகையில் அரசியல் கட்சிகளுக்கு இலங்கை அரசு விடுத்த அழைப்பின் அடிப்படையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று காலை இலங்கை புறப்பட்டுச் சென்றுள்ளார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணம் குறித்து பேட்டியளித்த அவர்,இன்று இலங்கையில் மரங்கள், தேயிலைத் தோட்டங்கள், ஸ்பைசஸ் இருக்கிறது என்றால் அது தமிழர்களின் கடும் உழைப்பினால் உருவாக்கப்பட்டது என்றும் கண்டி, நுவரேலியா போன்ற பகுதிகளில் காட்டு விலங்குகளுடன் போராடி அப்பகுதிகளை தேயிலை தோட்டங்களாக உருவாக்கியவர்கள் தமிழர்கள் எனவும் கூறினார். மலையகத் தமிழர்களை கவுரப்படுத்தும் வகையில் இலங்கை அரசே இவ்விழாவை முன்னெடுத்துள்ளதக கூறியுள்ளார்.
மேலும், இதுவரை எந்த பிரதமரும் செய்யாத ஒன்றை கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி செய்திருப்பதாகவும் இலங்கை பயணத்தின் போது மலையகத் தமிழர்களை சந்திக்க அவர்கள் வாழும் பகுதிகளுக்கே சென்றதாகவும் கூறினார். இதனால் மலையகத் தமிழர்களை பொறுத்தவரை பிரதமர் மோடியை தங்களுக்கு மிகவும் நெருக்கமாக வைத்து பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் அண்ணாமலை இலங்கை சென்ற போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மே தின விழாவில் கலந்துகொண்டதுடன், மலையகத் தமிழர்களையும் சந்தித்துப்ன் பேசினார். அப்போது அவர்கள் அளித்த கோரிக்கைகள் குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கும் அனுப்பினார். இந்தச் சூழலில் 5 மாத இடைவெளியில் இன்று மீண்டும் இலங்கை புறப்பட்டுச் சென்றுள்ளார் அண்ணாமலை.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications