தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் கிளம்பும் நயினார் நாகேந்திரன்.. 12 ஆம் தேதி மதுரையில் தொடக்கம்!
சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். முதற்கட்ட சுற்றுப்பயணம் வரும் 12 ஆம் தேதி மதுரையில் தொடங்கி, தூத்துக்குடியில் நவம்பர் 22 அம் தேதி நிறைவு பெறுகிறது. 2 ஆம் கட்ட சுற்றுப்பயணம் நவ. 24 தேனியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதாகவும், நீதிமன்ற விதிமுறைப்படி சுற்றுப்பயணம் நடைபெறும் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், "கரூர் உயிரிழப்பு குறித்து பாஜக நாடாளுமன்ற குழு ஆய்வு செய்துள்ளது. அந்த அறிக்கையை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லும் அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அக்டோபர் 12 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளேன். நீதிமன்ற விதிமுறைப்படி சுற்றுப்பயணம் தொடங்கும்.
முதற்கட்ட சுற்றுப்பயணம் வரும் 12 ஆம் தேதி மதுரையில் தொடங்கப்படும், முதற்கட்ட சுற்றுப்பயணம் தூத்துக்குடியில் நவம்பர் 22 ஆம் தேதி நிறைவு பெற்று, 2 ஆம் கட்ட சுற்றுப்பயணம் நவம்பர் 24 தேனியில் தொடங்கும்.
கரூர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் குழுவை அமைத்தது நல்ல விஷயம் தான். தமிழக முதல்வர் கரூரில் நடைபெற்ற சம்பவத்திற்கு இதுவரை வருத்தம் தெரிவித்துள்ளாரா? அவர் எந்த அடிப்படையில் பாஜகவை ஒட்டுண்ணி என்று சொல்கிறார். முதல்வர் 41 பேர் உயிரிழந்ததை இல்லை என்று சொல்கிறாரா அல்லது அவருடைய ஆட்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று சொல்கிறாரா அல்லது அதையெல்லாம் மறைக்க இதுபோன்று சொல்கிறாரா என்று தெரியவில்லை.
கரூரில் இரவு நடந்த நிகழ்ச்சியில் ஏன் மின்தடை ஏற்பட்டது, தவெக கேட்ட இடத்தில் ஏன் அனுமதி கொடுக்கவில்லை. எந்த அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் மின் தடை, காவல்துறை தடியடி, செருப்பு வீசுவதை முதலமைச்சர் அனுமதிப்பாரா? சம்பவம் நடந்த அரை மணி நேரத்தில் முதலமைச்சர் எப்படி வர முடியும்?. இரவோடு இரவாக சடலங்களுக்கு எப்படி உடற்கூராய்வு நடந்தது?
தவறு செய்பவர்களை காப்பாற்ற பாஜக ஒன்றும் நீதிமன்றம் கிடையாது. நீதிமன்றமும் நேர்மையான தீர்ப்பை வழங்க வேண்டும். திமுக இன்று மக்களின் வெகுஜன விரோதியாக மாறி உள்ளது, மக்களின் நன்மதிப்பை பெரிதும் இழந்துள்ளது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் ஒரு இடத்தில் டெபாசிட் கூட வாங்குமா என தெரியாது. 2011 இல் மிகப்பெரிய கூட்டணியை கருணாநிதி வைத்தபோதும் அதிமுக தான் வெற்றி பெற்றது. கூட்டணி பலத்தோடு இருக்கின்ற மாயையை திமுக உருவாகி உள்ளது, அதனை 2026 தேர்தலில் மக்கள் முறியடிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications