கோவிலுக்குள் ‘பிடி மண்’ எடுக்கச் சென்ற பாஜக மாநில நிர்வாகி கைது.. திடீரென கிளம்பிய கோஷம்.. பரபர!
சென்னை: பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க, 'என் மண் என் தேசம்' இயக்கத்திற்காக வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் பிடி மண் எடுக்க முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஜூலை 30ஆம் தேதி 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவாக 'என் மண் என் தேசம்' என்ற இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, அவற்றோடு சேர்த்து மரக்கன்று, செடிகளும் டெல்லிக்கு கொண்டு வரப்படும். அதைக் கொண்டு, தேசிய போர் நினைவுச்சின்னம் அருகே அமிர்தப்பூங்கா உருவாக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில், சென்னை வில்லிவாக்கத்தில் அகஸ்தீஸ்வரர் கோவிலில் பாஜகவினர் தரிசனம் செய்துவிட்டு, கோயிலில் இருந்து ஒரு பிடி மண் எடுத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற இருந்தது. 'என் மண் என் தேசம்' இயக்கத்துக்கு தமிழ்நாடு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் இதில் கலந்துகொள்ள வந்தார்.
அப்போது பிடி மண் எடுப்பதற்காக பாஜகவினரை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுப்புகள் அமைத்து போலீசார் தடுத்தனர். இதனால், போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட பாஜகவினர் 'பாரத் மாதா கி ஜே' என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், பாஜக மாவட்டத் தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள வினோஜ் பி செல்வம், "டெல்லியில் அமிர்த வனம் அமைத்து நாட்டை மண்ணின் மூலம் ஒருங்கிணைக்க பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். ஆனால் திமுக அதன் பிளவுபடுத்தும் சித்தாந்தத்துடன் தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று பார்க்கிறது! பாஜகவினர் அகத்தீஸ்வரர் கோவிலுக்குள் நுழைய முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications