"தொப்பி, கண்ணாடி அணிந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் ஆகிவிடுவாரா?" விபி துரைசாமி பொளேர்
சென்னை: தொப்பி, கண்ணாடி அணிந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் ஆகிவிடுவாரா? எங்களைப் பொறுத்தவரை ஒரே ஒரு எம்ஜிஆர் தான் என தமிழக பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார்.
ஒரு காலத்தில் எம்ஜிஆர், அடுத்தாக ஜெயலலிதா கையில் இருந்த அதிமுக இன்று எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் பூரித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
அதிமுகவின் தலைமை மறைந்த பிறகு கட்சி 2ஆக பிரிந்து, பின் ஒருவர் தலைமையில் மறுபடியும் அதிமுக இணைவது வழக்கமாகி உள்ளது. எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், ஜானகி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. பிறகு, ஜானகி தனது அணியை ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைத்துவிட்டு அரசியல் வாழ்கையில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

பூங்கொத்து வாழ்த்து
கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டது. இதற்கான சட்டப்போராட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அண்மையில் அறிவித்தனர்... இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அவருக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொப்பி
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட அன்று, அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். அதிமுக பொதுச்செயலாளரான பின்னர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவரை தொண்டர்கள் வரவேற்றனர். பட்டாசு வெடித்து உற்சாகப்படுத்தினர். காரை விட்டு எடப்பாடி பழனிசாமி இறங்கியதுமே, அவர்மீது மலர்களை தூவி வரவேற்றனர். அங்கிருந்த தொண்டர்கள், எடப்பாடி பழனிசாமியின் தலைக்கு எம்ஜிஆர் தொப்பியை அணிவித்தனர். உள்ளே நுழைந்ததுமே, வெள்ளை கலரில் எம்ஜிஆர் தொப்பி அணிவிக்கப்பட்டது.. பிறகு, எம்ஜிஆர் அணிவதைபோலவே, கருப்பு கலர் கூலிங்கிளாஸ் எடப்பாடிக்கு தொண்டர்கள் அணிவித்தனர்.. பிறகு, பிங்க் கலரில் ஒரு சால்வை போர்த்தப்பட்டது.. தொப்பி தலையில் வைத்து, கூலிங் கிளாஸை மாட்டிவிட்டதுமே, எடப்பாடி பழனிச்சாமி பூரித்து போய் அதனை ஏற்றுக் கொண்டார். அப்போது அச்சு அசல் எம்ஜிஆர் போலவே உருமாறினார் எடப்பாடி பழனிசாமி.. அவரை அந்த கோலத்தில் பார்த்ததுமே தொண்டர்கள் உற்சாகமாகினர். அந்த புகைப்படமும் வீடியோவும் வெளியான நிலையில் தமிழக பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார்.

கர்நாடகா
சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று (நேற்று) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாரதிய ஜனதா மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியமைக்கும்.

விபி துரைசாமி
கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை நல்லாட்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் காரணமாக கர்நாடகா தேர்தலில் நிச்சயமாக நாங்கள் வெல்வோம். ராகுல் காந்தி தகுதிநீக்க விவகாரத்தை பத்திரிகையாளர்கள் சரியாக எடுத்து செல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தியதற்காக தான் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்" என விபி துரைசாமி கூறினார். அப்போது எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வி.பி.துரைசாமி, " தொப்பி, கண்ணாடி அணிந்தால் எம்ஜிஆரா? எங்களுக்கு தெரிந்தது ஒரே எம்.ஜி.ஆர்" என்றார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications