'அந்த' 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை 'கண்டுபிடிக்க' பா.ஜ.க. பட்ட பாடு இருக்கே... அப்பப்பா!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் உதகை, விளவங்கோடு, தளி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கண்டுபிடித்து அறிவிப்பதற்குள் பாஜக பெரும்பாடு பட்டுவிட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
வேட்புமனுத் தாக்கலுக்கு நாளை மறுநாள் கடைசிநாள் என்பதால் இந்த விறுவிறுப்பு இன்னமும் அதிகரிக்கக் கூடும். ஆனாலும் கூட பாரதிய ஜ்னதா கட்சியால் உதகை, விளவங்கோடு, தளி ஆகிய 3 தொகுதிகளுக்கு இன்று பகல் 12 மணி வரை வேட்பாளர்களை அறிவிக்க முடியாத நிலை இருந்தது.

தளியில் தத்தளிப்பு
தளி சட்டசபை தொகுதியில் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என வேறொரு கட்சி மாஜி எம்.எல்.ஏ. கேட்டிருந்தார். அவர் நின்றால் நிச்சயம் தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ. உறுதி என கணக்குப் போட்டு அதிமுக கூட்டணியில் தளி தொகுதியை வாங்கியது பாஜக. ஆனால் சொந்த கட்சியே தமக்கு சீட் கொடுத்துவிட்டது உங்க கட்சிக்கு நான் வரவில்லை என அந்தர் பல்டி அடித்தார் அந்த மாஜி எம்.எல்.ஏ. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போனது பா.ஜ.க.

தளியில் அர்ஜூன் போட்டி?
இதையடுத்து தளி தொகுதியில் நடிகர் அர்ஜூனை நிற்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனாலும் நடிகர் அர்ஜூன் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் யாரை வேட்பாளராக போடுவது என்பதில் குழப்பத்தில் இருந்தது பாஜக. இப்போது நாகேஷ்குமார் என்பவர் வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.

உதகையில் பரிதவிப்பு
உதகமண்டலத்தைப் பொறுத்தவரையில் அங்கே வேட்பாளருக்கான தகுதியானவர்கள் பாஜகவில் இல்லையாம். அதனால் பிற மாவட்ட நிர்வாகி ஒருவரைத்தான் உதகையில் நிறுத்தியாக வேண்டிய நிலை உருவானதாம். ஒருவழியாக போஜராஜன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விளவங்கோடு விளையாட்டு
விளவங்கோடு தொகுதியில் தளி தொகுதியைப் போலதான். அந்த தொகுதியில் சீட் கிடைக்காவிட்டால் தங்களது கட்சிக்கு அந்த பிரமுகர் வருவார் என இலவு காத்து கொண்டிருந்தது பாஜக. கடைசியாக அந்த கட்சியிலேயே அந்த பிரமுகருக்கு சீட் கிடைத்துவிட்டது. இதனால் விளவங்கோடு தொகுதி வேட்பாளர் யார் என தெரியாமல் விழிபிதுங்கியது பாஜக. இப்போது ஜெயசீலன் என்பவர் வேட்பாளராக்கப்பட்டார்.

கேரளா பரிதாபம்
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக. அதில் ஒருவர் பாஜகவில் அடிப்படை உறுப்பினராகவே இல்லாத பழங்குடி வகுப்பைச் சேர்ந்த இளைஞர். அந்த இளைஞர் தேர்தலில் போட்டியிட முடியாது என மறுத்துவிட்டார். இதனால் வேட்பாளர்களை தேடியது பாஜக. தமிழகத்திலும் அப்படித்தான். பரிதாப பாஜக!
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications