திமுக ஏமாற்றுகிறது.. "கருணாநிதி கும்பலுக்கு" என்ன கொள்கை இருக்கு?.. மாரிதாஸ் பரபரப்பு டிவீட்
மாரிதாஸ் திமுகவை சாடி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: கருணாநிதி கும்பலுக்கு என்ன இருக்கு கொள்கை? என்று கேட்டு மாரிதாஸ் போட்டுள்ள டிவீட் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Recommended Video
சோஷியல் மீடியாவில் சர்ச்சைக்கிடமான கருத்துக்களைப் போட்டு பிரபலமானவர் மாரிதாஸ்.. பாஜகவையும் பிரதமர் மோடியையும் ஆதரித்து தன்னுடைய யூடியூப் சேனல் வழியாக பேசி பேசியே ஃபேமஸ் ஆனவர்..
நிறைய அபத்தமாகவும் பேசி ஃபேமஸ்.. அதிலும் புள்ளிவிவரங்களை துல்லியமாக கூறுகிறேன் என்று சொல்லி, நெட்டிசன்களிடம் சில சமயம் வறுபடுபவர்.. பல சமயம், மாரிதாஸின் வீடியோக்கள் வைரலானதும் உண்டு.

ரஜினி
அரசியலுக்கு வராமலேயே ரிடையர் ஆன ரஜினியை ரொம்பவும் நம்பிக் கொண்டிருந்தவர்.. ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று இவரது சத்தம்தான் அதிகமாகவும் அப்போது இருந்தது.. இதன்பிறகு டயர்டாகிவிட்டேன் என்று சொல்லி வீட்டுக்கும் போன மாரிதாஸ், மறுபடியும் திரும்பி வந்துவிட்டார்.. மறுபடியும் வீடியோ போட்டு கொண்டுள்ளார்.. இப்போது திமுகவை தொடர்ந்து விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்..

திமுக
அந்த வகையில், ஒரு ட்வீட் போட்டு, கருணாநிதியையெல்லாம் அதற்குள் இழுத்து வைத்து பேசியுள்ளார். அந்த ட்வீட்டில், "பெட்ரோல் டீசல் விலை குறைக்க முடியாது - திமுக நிதி அமைச்சர்": 2 மாதம் முன் டீசல் பெட்ரோல் 5,10 குறைப்போம் என்ற வாக்குறுதி கொடுத்தது திமுக தான்... ஆக இதுவும் நீட் தேர்வு போல் அல்வா தான்!

மாணவர்கள்
பாதி நூற்றாண்டாக மக்களின் ஆசையைத் தூண்டி ஏமாற்றி கொள்ளை அடிக்க திமுக தவிர யாராலும் முடியாது. திமுக அமைச்சர் கூறிவிட்டார் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயார் ஆகவும். திமுக ஏமாற்றுகிறது என்று நான் சொன்னது தற்போது உண்மை எனப் பெற்றோர்கள் புரிந்து கொள்வர்.

கையெழுத்து
இப்போதும் கூறுகிறேன், திமுக 100% ஏமாற்றும் நோக்கத்தோடு தான் தெரிந்தே முதல் கையெழுத்து நீட் ரத்து எனப் பிரச்சாரம் செய்தது."திமுக வாக்குறுதி கொடுத்தது போல் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நீட் தேர்வு ரத்து ஆகவில்லை என்றால் MLA பதவியை திமுகவினர் ராஜினாமா செய்வர்" என்று ஸ்டாலின், உதயநிதி கூற முடியுமா? என கூறியுள்ளார்.

வீரம்
இதனைத் தொடர்ந்து, "ஜெய் ஹிந்த். வாழ்க பாரத தேசம். திமுக முடிந்தால் திராவிட நாடு கோஷம் போடு பார்க்கலாம். இது பாரத தேசம். உன்னை போல் பல ஆயிரம் பேர் பார்த்தாகிவிட்டது. காஷ்மீர் பிரிவினைவாதிகளையே ஒடுக்கியாச்சு கருணாநிதி கும்பலுக்கு என்ன இருக்கு கொள்கை? திமுக பிரிவினை பேசு. பார்க்கலாம் உன் வீரத்தை" என ட்வீட் போட்டுள்ளார்.
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications