என் வீட்டில் ED ரெய்டு பண்ணனும்னு சொல்றீங்களே.. 'சில்லியா' இருக்கு.. ஆவேசமாக பேசிய மாணவர் ஃபயாஸ்தீன்
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக பேசி வருவதால் என் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்த வேண்டும் என்று பாஜகவினர் பேசி வருகிறார்கள் என்று திமுக சார்பில் நடத்தப்பட்ட நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவ மாணவர் ஃபயாஸ்தீன் கூறினார்.
சமீபத்தில் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஜெகதீஷன் நண்பரான ஃபயாஸ்தீன் இன்று திமுக நடத்திய நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மருத்துவ மாணவரான ஃபயாஸ்தீன் கூறியதாவது:- நீட்டை பொறுத்தவரை எதிர்ப்பதற்கு ஆயிரம் கருத்துக்கள் உள்ளது. ஏழைக் குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு டாக்டர் ஆக முடியாத சூழல் இருக்கிறது.

நீட் தேர்வு என்பதே ஒரு சாபக்கேடாக உள்ளது. இரண்டு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சி 400 ல இருந்து 500 மார்க் வாங்குனாலும் காசு இல்லாத ஒரே காரணத்திற்காக உனக்கு இங்கே மெடிக்கல் சீட் கிடையாது.. வெறும் 100 -150 மார்க் எடுத்துட்டு கையில் காசு வச்சிருந்தால் இந்தியாவில் இருக்கும் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் டீம் காலேஜில் சீட் கன்ஃபார்ம்.. என் தலைமுறையில் நான் தான் முதல் பட்டதாரி...
நான் ஒழுங்கா படிக்காவிட்டாலும் என் அப்பா லட்ச லட்சமாக காசு கொடுத்து என்னை டாக்டராக்க வேண்டும் என ஆசையில் சேர்த்து விட்டார். எனக்கு இந்த ஃபீல்டு பிடிச்சிருக்கு... ஜெகதீஷ் மூலமாகவும் மக்கள் மூலமாகவும் ஏதாவது ரெவலூஷன் கொண்டு வரனும் என யோசிச்சிட்டு இருக்கேன். நீட் எக்ஸாம் முழுக்க முழுக்க பண நோக்கத்துடன் தான் இருக்கு... நீங்க ஜஸ்ட் பாஸ் ஆனாலே போதும் இந்தியாவில் இருக்கும் ஏதோ ஒரு டீம் மெடிக்கல் கல்லூரியில் ரூ.25 லட்சம் ஆண்டுக்கு செலுத்தினால் வாங்கி விடலாம்.
சோஷியல் மீடியாவில் என்ன நினைக்கிறார்கள் என்றால்.. இது சட்ட விரோதமாக வாங்குறாங்க.. பிளாக்கில் வாங்குறாங்க என நினைக்கிறார்கள்.. இது லீகல் தான்.. மத்திய அரசு அனுமதியோடு இருக்கு... நீட் கொண்டு வருவதற்கு சொன்ன இரண்டு காரணம் என்னவென்றால், மருத்துவ மாணவர்களின் தரத்தை உறுதி செய்வது மற்றும் பணம் புரள்வதை தடுக்க போறோம் என்றார்கள். ஆனால் இரண்டையுமே பண்ணவில்லை.
பணம் தான் இங்கு எல்லாமே.. பணம் கொடுத்து டாக்டர் ஆகிறவர் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார். பொதுமக்களுக்கு சர்வீஸ் பண்ண வேண்டும் என இருக்க மாட்டார். நமது அரசியல் அமைப்பின் அடிப்படை என்னவென்றால் கூட்டாட்சி.. மாநில சுயாட்சி... மாநிலங்கள் எல்லாம் சேர்த்துதான் ஒன்றிய அரசே தவிர.. ஒன்றிய அரசை சேர்த்து மாநில அரசு கிடையாது. நமக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையும் இதைத்தான் சொல்லி இருக்கிறார். மருத்துவ மாணவராக சொல்கிறேன்.. தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் ரோல் மாடலாக உள்ளது. மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் சிறப்பாக உள்ளது. உலகின் தலை சிறந்த மருத்துவர்கள்... நமது மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்.

ஜெகதீஷ் மரணத்திற்கு பிறகு நான் இது பற்றி பேசுவதை பார்த்து விட்டு மத்திய அரசை ஆதரிக்கிறவர்களும் நீட் தேர்வை ஆதரிக்கிறவர்களும் தொடர்ந்து என் மேலே.. ஓபனா சொல்வது என்றால் பாஜக ஆதரவாளர்கள் எல்லாம்... என்னை வெட்டனும், குத்தனும் என்கிறார்கள். அதெல்லாம் சொன்னா கூட பரவா இல்லை..ED யை விட்டு சோதனை நடத்த வேண்டும் என்று சொல்கிறார்கள்.
இவன் அப்பா 25 லட்ச ரூபாய் கட்டுறாரு.. ரெய்டு பண்ணனும் என சொல்கிறார்கள்.. லீகலா வாங்குறாங்க... போய்.. மத்திய அரசை கேளுங்க.. அதை கேட்காமல் என்னை ரெய்டு பண்ணனும் சொல்லுறது சில்லியாக இருக்கிறது.. எனக்கு 19 வயதுதான் ஆகிறது... உங்களுக்கு கட்ஸ் இருந்தால் சித்தாந்தத்துடனும் புள்ளி விவரங்களுடன் பேசுங்கள்... மிரட்டலுடன் பேசாதீங்க... இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications