ஒத்த சீட்டு கூட தேறாதா? 5 எம்.எல்.ஏக்களாவது வேணுமே.. தமிழக பாஜகவுக்கு டெல்லி மேலிடம் கறார் உத்தரவு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் எப்படியாவது 5 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற வேண்டும் என கறார் உத்தரவு பிறப்பித்துள்ளதாம் டெல்லி பாஜக மேலிடம்.
தமிழக சட்டசபையில் 2001-ம் ஆண்டு பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அதன்பின்னர் பாஜகவுக்கு அப்படி ஒருவாய்ப்பே கிடைக்கவில்லை. தமிழக தேர்தல்களில் நோட்டாவுடன் போட்டியிடும் கட்சி என்ற நிலையில்தான் பாஜக இருக்கிறது.

20 தொகுதிகளில் பாஜக போட்டி
தற்போதைய சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் பாஜக போட்டியிடுகிறது. அதிமுகவிடம் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக பார்த்து அடம்பிடித்து கேட்டு வாங்கியிருக்கிறது பாஜக. ஆனாலும் பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்துக்காக அதிமுக மீதே மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

வாய்ப்பே இல்லையாம்..
தமிழக தேர்தல் நிலவரம் தொடர்பாக டெல்லி பாஜக மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கணிப்புகளிலும் கூட பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்பட்டிருக்கிறது. இது பாஜக மேலிடத்தை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.

புதுச்சேரியில் நம்பிக்கை
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் எப்படியும் ஆட்சி அமைந்துவிடும் என்கிற நம்பிக்கையில் பாஜக இருக்கிறது. ஆனால் தமிழகம், கேரளாவில் ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால் என்ன செய்வது என தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார்களாம் பாஜக தலைவர்கள். இது தொடர்பாக தமிழக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.

குறைந்தபட்சம் 5 எம்.எல்.ஏக்கள்
அப்போது, தமிழகத்தில் ஆகக் குறைந்தபட்சம் 5 எம்.எல்.ஏக்களாவது நமக்கு இருக்க வேண்டும். அதற்கு என்ன வழியோ அதை பாருங்கள்.. சாத்தியமே இல்லை என்கிற பதில் எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை என கறாராக சொல்லிவிட்டதாம் டெல்லி மேலிடம். இதனால் 5 தொகுதிகளை மட்டும் குறிவைத்தாவது அதிமுக தயவில் வெல்ல வேண்டும் என்பதில் இப்போது தமிழக பாஜக படுதீவிரமாக உள்ளதாம்.
-
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு!












Click it and Unblock the Notifications