திருப்பரங்குன்றம் உள்பட 17 கோயில் தொகுதிகளை குறிவைக்கும் பாஜக? லிஸ்ட் தந்த அமித்ஷா? குழப்பத்தில் EPS!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் கோயில்கள் கொண்ட தொகுதிகளை குறி வைத்து பாஜக போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முதலில் 16 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் அது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்.

இந்த நிலையில் தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் கட்சிகள் பம்பரம் போல் சுழன்று கொண்டிருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம், ஐஜேகே, தமாகா, தமமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
கூட்டணி அறிவிப்பு
தேமுதிக, ராமதாஸ் பாமக ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பையும் சொல்லவில்லை. இதனால் அதிமுக சார்பில் இன்னும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.
எத்தனை தொகுதிகள்
ஆனால் பாஜகவோ அதிமுகவிடம் 40 தொகுதிகளை கேட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக கேட்கவுள்ள தொகுதிகளில் ஒரு பேட்டர்னை பாலோ செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்து விரோதம் என பிரச்சாரம்
அதாவது திமுகவை இந்து விரோத திமுக என்று பிரச்சாரம் செய்து வரும் நிலையில் கோயில் நகரங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாம். அதில் டாப் திருப்பரங்குன்றம்தான். இது மட்டுமல்ல தமிழகத்தில் கோவில்கள் அதிகம் உள்ள மேலும் 16 தொகுதிகளில் போட்டியிட்டால், வெற்றிபெறுவது எளிது, உறுதி என பாஜக தலைமை உறுதியாக நம்புவதாகத் தெரிகிறது.
அமித்ஷா
கடந்த முறை நெல்லைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமித்ஷா, அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோருடன் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதோடு, எந்தெந்தத் தொகுதிகள் பாஜகவுக்கு வேண்டும் என்ற பட்டியலையும் அமித்ஷா கொடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
என்னென்ன தொகுதிகள்
அதன்படி, ஸ்ரீரங்கம் , காஞ்சிபுரம்,மதுரை மேற்கு/கிழக்கு, திருவண்ணாமலை, சிதம்பரம், கும்பகோணம், காஞ்சிபுரம் வடக்கு/தெற்கு, தஞ்சாவூர், ஸ்ரீவில்லிப்புத்தூர், திருச்செந்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் தெற்கு, சேலம் ஆகிய 16 தொகுதிகள் பட்டியலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. திருப்பரங்குன்றத்தையும் சேர்த்தால் 17 தொகுதிகள்!
திமுகவை வீழ்த்த
திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற ஒத்த கருத்தில் இருக்கும் அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக கேட்கும் கோவில் தொகுதிகளை ஒதுக்குவதில் அதிமுகவுக்கு இன்னும் குழப்பம் நீடிப்பதாகவே தெரிகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குறைந்தபட்சம் 25-35 தொகுதிகளில் பாஜக போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாகவும், அதில், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 17 கோவில் தொகுதிகளை கேட்பதும் அதிமுகவுக்கு சில சிக்கல்களை உருவாக்கியிருப்பதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தயக்கம்
காரணம், இந்தக் கோவில் நகரங்களில் அதிமுகவுக்கும் வலுவான வாக்குவங்கி இருப்பதுதான். குறிப்பாக, திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால், அதிமுக அதை எளிதில் கைவிட விரும்பவில்லை.
கோவில் தொகுதி
மேலும், கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகளையும் அதிகமாக ஒதுக்கி, கோவில் தொகுதிகளையும் பாஜகவுக்குக் கொடுத்தால், அதிமுகவுக்கான வாக்கு வங்கி குறைவாக உள்ள நிலையில், வெற்றிவாய்ப்பு குறைந்துவிடுமோ என்ற அசத்திலும் அதிமுக தலைமை குழம்பி வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications