விஜய் Wife சங்கீதா.. ஸ்டாலின் தங்கச்சி செல்வியும் Friends! இப்போ புரியுதா? ப்ளேட்டை திருப்பிய பாஜக!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக பாஜக தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், பாஜக பிரமுகரும் சென்னை முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம் குறித்து கராத்தே தியாகராஜன் பேசியது சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்றுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தெருமுனை தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை முன்னெடுத்து வருகிறது தமிழக பாஜக. அந்த வகையில், நாளை நமதே; தமிழ்நாடும் நமதே எனும் தலைப்பில் பொதுக் கூட்டங்களை நடத்துகின்றனர்.
இந்த கூட்டங்களில், பல்வேறு சர்ச்சையான சம்பவங்களை தமிழக பாஜகவினர் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அடையாறு பகுதியில் உள்ள சாஸ்திரி நகரில் தமிழக பாஜகவின் சக்தி கேந்திரா ஏற்பாட்டில் பொதுக் கூட்டம் நடந்தது.

தமிழக பாஜக பிரச்சாரம்
இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில செயலாளரும், சென்னையின் முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய கராத்தே தியாகராஜன்," தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ள பிரச்சனையைப் பற்றி பேசினார் கராத்தே தியாகராஜன்.
நயினார் நாகேந்திரன்
அப்போது," பத்து நாளைக்கு முன்பு நயினார் நாகேந்திரன் ஒரு தகவலைச் சொன்னார். அதுக்கு எல்லாரும் குதிச்சாங்க. ஆனா, அந்த நபரால் (விஜய்) பாதிக்கப்பட்டவரே வெட்ட வெளிச்சமாக வெளியே வரும்போது, சோசியல் மீடியா உட்பட எல்லா இடத்துலயும் பரவியிருக்கிறது. இந்த விவகாரம் நயினாருக்கு முன்கூட்டியே தெரியுமோ என்னமோ? ஆனா, ஒன்னு மட்டும் எல்லோருக்கும் தெரியும். நடிகர் விஜய்யோட மனைவி சங்கீதாவும், முதல்வர் ஸ்டாலினின் தங்கை செல்வியும் நெருங்கிய நண்பர்கள்; குடும்ப நண்பர்கள். இதையெல்லாம்... கூட்டிக் கழிச்சிப் பார்த்தா புரிஞ்சிக்கலாம். இந்த விவகாரத்தில் எல்லாம் புரியும்.
கராத்தே தியாகராஜன்
நடிகர் ராதாரவியோட ஒரு நிகழ்ச்சிக்காக மலேசியாவுக்கு நான் போனேன். நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தப்போ, என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார் ராதா ரவி. என்னால் பதில் சொல்லமுடியவில்லை. என்னென்னா... விஜய்யைப் பத்தி நயினாரு பேசியதை வானதி சீனிவாசன் கண்டிச்சிருக்கிறாராமே என கேட்டார். ஆமாம்ன்னு சொன்னேன். அப்போ ராதாரவி, தனி நபரைப் பத்தி பேசக்கூடாதா?
சங்கீதா விஜய்
இதே வானதி சீனிவாசன், 2021-ல் கோவையில் பிரச்சாரம் செய்ய என்னைக் கூப்பிட்டு, ஒரு கூட்டத்துக்கு 1 லட்சம் ரூபான்னு 4 கூட்டத்துக்கு 4 லட்சம் கொடுத்து கமல் ஹாசனைத் திட்டச் சொன்னாங்க. கமலுக்கு எத்தனைப் பொண்டாட்டின்னு பேசச் சொன்னாங்க. இன்னைக்கு நயினார் நாகேந்திரன் சொன்னதை அவர் கண்டிக்கிறாருன்னா, அன்னைக்கு கமல்ஹாசனை திட்டச் சொன்னாரே ?
தமிழக தேர்தல்
இது வினோதமா இருக்கே? எனக்கு ஒன்னுமே புரியலை! என ராதாரவி என்னிடம் கேட்டார். நான் கேட்கலை. ராதாரவி என்னிடம் கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியலை. இப்படி பல்வேறு பிரச்சனைகள் தமிழ்நாட்டு அரசியலில் ஓடிக்கிட்டு இருக்கு என்று தனது பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார் கராத்தே தியாகராஜன். கராத்தேவின் இந்த பேச்சு, தற்போது கமலாலயத்தை ரவுண்ட் கட்டி வருகிறது.
-சிறப்பு நிருபர் எழில்
-
ரஜினிகாந்த் திருந்திவிட்டார்.. விஜய் கட்சியை கலைத்துவிட்டு சென்றால் நல்லது - அமீர் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
Vijay: "உங்க விஜய் இன்று புதுவைக்கு வராரு" என்ன பேச போகிறார்? 11 நிபந்தனைகள் விதித்த போலீஸ்! -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications