அக்கா, அக்கான்னு அண்ணாமலை சொல்வார்.. ஆனா நோ யூஸ்.. பாஜகவிலிருந்து விலகிய திலகவதி ஆவேசம்

“பாஜகவில் இருந்து வெளியில் செல்பவர்களை அண்ணாமலை துரோகி என்றபோது சிரிப்பாக இருந்தது. துரோகிகளை கூடவே வைத்துக்கொண்டு வேண்டாம் என்று வெளியில் செல்பவர்களை துரோகிகள் என்கிறார்.”

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகிய 100 பெண் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்த நிலையில், அண்ணாமலை தங்களின் எந்த கோரிக்கைகளையும் ஏற்கவில்லை எனவும், அனைவருமே அதிருப்தியில் இருப்பதாகவும் அக்கட்சியிலிருந்து விலகிய நிர்வாகி திலகவதி முருகேசன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருப்பதாவது, "உண்மையான உழைப்புக்கே ஏற்ற மரியாதை இந்த சூழலில் இல்லை. அதனால் நாங்கள் அதிருப்தி அடைந்தோம். பெண்கள் முன்னேறி வந்துவிடக்கூடாது என்ற சூழல் இருப்பதாகவே நான் சொல்வேன்.

தங்களுக்கு தேவையான ஆட்களை அவர்கள் சேர்த்துக்கொள்வார்கள். அவர்கள் திறமையாக இருக்கிறார்களா? உழைக்கிறார்களா? நேர்மையானவர்களா? என்பதையெல்லாம் பார்ப்பதில்லை. மாநிலத் தலைமை இதற்கு நடவடிக்கை எடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அக்கா.. அக்கா என்றார்

அக்கா.. அக்கா என்றார்

நடவடிக்கை எடுக்கிறேன் அக்கா.. பார்க்கிறேன் அக்கா.. என்று சொன்னார். ஆனால், உள்கட்சிக்குள் பிரச்சனை நடக்கிறது என்று 10 பேர் சொன்னால் மாவட்டத் தலைவரை அழைத்து என்ன பிரச்சனை என்று கேட்போம். அதை சரி செய்வோம் என்று அவர் நடந்துகொள்ளவில்லை. முன்பை போல் சென்றவுடன் தலைவரை பார்க்க முடியும் என்ற நிலை இல்லை.

மாநிலத் தலைவருடன் சந்திப்பு

மாநிலத் தலைவருடன் சந்திப்பு

நிறைய நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதாக இருந்தது. முன்பெல்லாம் இங்கேயே யார் தலைவரை பார்க்க வேண்டும், யார் பார்க்கக்கூடாது என்று நிறுத்திவிடுவார்கள். உதவியாளரிடம் என்ன பிரச்சனை என்று சொல்லி கையெழுத்து போட்டால் மாநில தலைவரை பார்க்க அனுமதிப்பார்கள்.

நடவடிக்கை எடுக்காத அண்ணாமலை

நடவடிக்கை எடுக்காத அண்ணாமலை

நான் மண்டலத்தில் பிரச்சனை இருக்கிறது, மாவட்ட தலைவர் மீதும் புகாரளிக்க வேண்டும் என்று சொன்னேன். அவரை பார்க்க அனுமதி கிடைத்தது. புகாரை சொன்னவுடன், 'சரிங்கக்கா.. பார்க்க சொல்றோம்கா' என்று சொல்லுவார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் அதிருப்தியில் வெளியில் வந்துவிட்டோம். பேசுவதைபோல் நடந்தால் சந்தோசமாக இருந்திருக்கும்.

 மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்

மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்

நாங்கள் 6, 7 முறை சொல்லி இருக்கிறோம். எங்களுக்கு பிரச்சனை இருப்பதாக சொன்னோம். பழைய நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பெரிய பெரிய பொறுப்புகளை வழங்கினார்கள். பழையவர்களையும் புதியவர்களையும் ஒருங்கிணைக்கவே இல்லை. மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை வரவேற்பதைபோல், கட்சியைவிட்டு வெளியில் சென்றாலும் ஏற்கவே வேண்டும்.

யார் துரோகி?

யார் துரோகி?

ஆனால், கட்சியில் இருந்து வெளியில் செல்பவர்களை துரோகி என்றார். எனக்கு அதை பார்க்கும்போது சிரிப்பாக இருந்தது. துரோகிகளை கூடவே வைத்துக்கொண்டு வேண்டாம் என்று வெளியில் செல்பவர்களை துரோகிகள் என்கிறார். முதலில் உங்களுடன் இருக்கும் துரோகிகளை கண்டுபிடித்து அவர்களை களை எடுங்கள். குறை சொல்பவர்களை குற்றம் சொல்ல வேண்டாம்.

 யார் தலைவன்?

யார் தலைவன்?

தொண்டர்களின் உழைப்பில்தான் தலைவன் உருவாகிறார். தொண்டனின் பிரச்சனையே கேட்காமல் எப்படி தலைவன் இருக்க முடியும்? தொண்டரின் பிரச்சனையை பார்க்காமல் நான் 5 வது கியர் போட்டு வண்டியில் போகிறேன், வழியில் இறங்குபவர்கள் இறங்கிக்கொள்ளுங்கள் என்கிறார். நான் மித வேகம் மிக நன்று என்று சொல்வேன். பெரியாவர்கள் அப்படிதான் சொல்லி இருக்கிறார்கள்.

கட்சி தாவியவர்கள்

கட்சி தாவியவர்கள்

இந்த கட்சியில் இருந்து அந்த கட்சிக்கு செல்பவர்களும் வாழ்க என்று கோஷம் தானே போடப்போகிறார்கள். ஆடு மாடா மாய்க்கப்போகிறார்கள்? ஆடு மாடு மேய்க்கப்போனால் கூட சந்தோசப்படுவேன் என்றார். அப்படியென்றால் நீங்கள் ஐபிஎஸ் பதவியை விட்டுவிட்டு அரசியலுக்கு வரவேண்டும் என்பதே இல்லை. அதில் இருந்தே நல்லது செய்திருக்கலாமே?

ஆடு மாடு மேய்த்திருக்கலாம்

ஆடு மாடு மேய்த்திருக்கலாம்

ஆடு மாடு மேய்த்து கூட பொது சேவை செய்திருக்கலாமே? மாநில தலைவர் என்று உங்களுக்கு கட்சி, பொறுப்பு தேவைப்பட்டதைபோல் ஒவ்வொருவருக்கும் இருக்கும். இன்னும் பலர் பாஜகவில் இருந்து வெளியேற வாய்ப்புகள் உள்ளது. அத்தனை பேரும் அதிருப்தியில் உள்ளார்கள். பலர் போன் செய்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+