திமுக கோட்டை.. ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், திருவாரூர், ஒட்டன்சத்திரம்-பாஜகவிடம் தள்ளிவிடும் அதிமுக?
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதாக உத்தேசமாக சொல்லப்படும் சில தொகுதிகள் பட்டியலை பார்த்தாலே ஆஹா.. அலேக்காக தள்ளிவிட்டுவிட்டனரோ என டக்கென சொல்ல வைக்கிறது.
அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் என ஒரு உத்தேசமான பட்டியல் வலம் வருகிறது. இதில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதாம்.
இதில் 4 தொகுதிகள் லம்ப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திலாம். இன்னொரு பக்கம் சில தொகுதிகளை பார்க்கும்போதே ஏதோ ஒரு உள்குத்து இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

ஸ்டாலின் வென்ற ஆயிரம் விளக்கு
உதாரணமாக ஆயிரம் விளக்கு தொகுதி பாஜகவுக்காம்.. போனமுறை திமுகவில் வெற்றி பெற்று பாஜகவுக்கு தாவிய கு.க.செல்வம்தான் இம்முறை வேட்பாளராக போட்டியிட வாய்ப்பிருக்கிறது. ஆனால் திமுக இந்த தொகுதியில் 6 முறை அசால்ட்டாக வெற்றி பெற்றிருக்கிறது. எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவின் கே.ஏ. கிருஷ்ணசாமி 2 முறையும் 2011-ல் அதிமுகவின் வளர்மதியும் வென்றிருக்கிறார்கள். 1989, 1996, 2001, 2006 என 4 முறை மு.க.ஸ்டாலின் வெற்றி வாகை சூடிய திமுகவின் கோட்டை. இம்முறை திமுகவுடன் பாஜக பலப்பரீட்சை நடத்திப் பார்க்கப் போகிறதாம்.

கருணாநிதியின் சேப்பாக்கம்
அடுத்தது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி.. முன்னர் இது சேப்பாக்கம் தொகுதி. சேப்பாக்கம் தொகுதிதான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 3 முறையும் ரஹ்மான்கான் 3 முறையும் என திமுக 6 முறை வென்ற தொகுதி. 1991-ல் கூட காங்கிரஸ்தான் வென்றது. அதிமுக ஒருமுறை கூட வெல்லாத தொகுதி. இந்த தொகுதியில் நடிகை குஷ்பு, பாஜகவின் வேட்பாளராக களமிறங்கலாம்.

இடது-திமுக கோட்டை திருவாரூர்
இதேபோல் திருவாரூர் தொகுதி.. கருணாநிதியின் சொந்த தொகுதி.. இடதுசாரி, திமுகவின் கோட்டை. 4 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் 7 முறை திமுகவும் வென்ற தொகுதி. 2011, 2016-ல் கருணாநிதி இங்கு போட்டியிட்டு வென்றார். ஒருமுறை கூட அதிமுக இங்கே வென்றதே இல்லை. இம்முறை பாஜகவுக்கு தள்ளிவிடுகிறதாம் அதிமுக.

சக்கரபாணி கோட்டை
மற்றொரு தொகுதி ஒட்டன்சத்திரம். 1996 முதல் 2016 வரை தொடர்ச்சியாக 5 முறை திமுகவின் அர. சக்கரபாணி வெற்றி பெற்ற தொகுதி. மொத்தம் 6 முறை திமுகவும் 3 முறை அதிமுகவும் காங்கிரஸ் 1 முறையும் வென்ற தொகுதி. திமுகவின் கோட்டையாகவே ஒட்டன்சத்திரத்தை அர.சக்கரபாணி வைத்திருக்கிறார். இந்த தொகுதியும் இப்போது பாஜகவுக்கு போகிறதாம். இப்படி திமுகவின் ஆகப் பெரும் வலிமைமிக்க கோட்டைகளில் பாஜக முட்டி மோதப் போகிறதாம்... இதனால்தான் அதிமுக மெய்யாலுமே பாஜக தலைமையில் இந்த தொகுதிகளை கட்டிவைத்து தள்ளிவிட்டிருக்கிறதோ என்கிற கேள்வி எழுகிறது.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications