தினமும் 50 ஆயிரம் பேர்.. அயோத்திக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் தீவிரம்.. பாஜகவின் மெகா திட்டம்!
சென்னை: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷகத்துக்குப் பிறகு தினமும் 50 ஆயிரம் பேரை அயோத்தி அழைத்துச் செல்ல பாஜக ஏற்பாடு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் டால்பின் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலச் செயலாளர் டால்பின் ஸ்ரீதரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இது தொடர்பாக, டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 150 பேரை அழைத்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி உள்ளார். இக்கூட்டத்தில், கோவில் கும்பாபிஷேகத்துப் பிறகு அயோத்தியை பிரபலமடையச் செய்வது நமகு கைகளில்தான் இருக்கிறது. ஆகவே, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குறைந்தது 1.50 லட்சம் பக்தர்களை அயோத்திக்கு அழைத்துச் செல்லும் பணியில் இறங்க வேண்டும்.

அதேசமயம், அயோத்திக்குச் செல்ல வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், அதற்கான வசதி அவர்களிடம் இருக்காது. அப்படிப்பட்டவர்களை அழைத்து கட்டாயம் அயோத்தி பயணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். முக்கியமாக, இராமர் கோவில் தரிசனத்துக்கு அழைத்து வரும் விஷயத்தில் ஜாதி ரீதியாக எந்தவித பாகுபாடும் பார்க்கக் கூடாது. இது தொடர்பாக, வரும் 25ஆம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை பிரச்சார இயக்கத்தை நடத்த வேண்டும். இதன் மூலம், ஒவ்வொரு நாளும் 50,000 பேரை அயோத்திக்கு அழைத்து வந்து தரிசனம் செய்ய வைக்க வேண்டும். அதேபோல, தங்களது சொந்த செலவில் வரும் பக்தர்களுக்கு, தங்குமிடம் உள்ளிட்ட மற்ற ஏற்பாடுகள் அனைத்தையும் பாஜகவே ஏற்றுக் கொள்ளும்.
அயோத்திக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, நாடு முழுதும் 430 நகரங்களில் இருந்து, குறிப்பட்ட நாட்களில் மட்டும் அயோத்திக்கு 35 இரயில்கள் பிரத்யேகமாக இயக்கப்படும். ஆகவே, லோக்சபா தேர்தலுக்குள் எப்படியும் நாடு முழுவதும் இருந்து 50 லட்சம் பேரையாவது தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதற்காக, மாநில அளவில் தொடங்கி, சட்டப்பேரவை தொகுதி அளவு வரை ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பேற்று செயல்படுவார்கள். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், அயோத்திக்கு பக்தர்களை அழைத்து வரும் விவகாரத்தில் எக்காரணம் கொண்டும் பா.ஜ.க கொடியை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, திறப்பு விழாவை தீபாவளிப் பண்டிகையைப்போல கொண்டாட வேண்டும். கும்பாபிஷேக நாள் மட்டுமல்லாது, வரும் 14-ம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 2 வாரங்களுக்கு இந்த பிரம்மாண்ட நிகழ்வை கொண்டாடி மகிழ வேண்டும். இந்நாட்களில் நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க நிர்வாகிகள், அவரவர் பகுதிகளில் இருக்கும் கோவில்களை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். திறப்பு விழா தினத்தன்று மாலை வேளையில் ஒவ்வொருவர் வீட்டிலும் 5 தீபங்களை ஏற்ற வேண்டும். இவை 'இராம ஜோதிகள்' என்று அழைக்கப்படும். இவற்றை பக்தர்களும், பா.ஜ.கவினரும் குடும்பத்துடன் வணங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications