சீனுக்கு வந்த விக்ரமன்.. மனுஷதன்மையே இல்லை.. டெல்லி தமிழ் மாணவர்கள் தாக்குதலுக்கு கண்டனம்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் உட்பட பலர் மீது ஏபிவிபி-யினர் நடத்திய தாக்குதலுக்கு விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி விக்ரமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி நடத்திய தாக்குதலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியும், பிக்பாஸ் போட்டியாளருமான விக்ரமன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மாணவர் அமைப்பு என்ற பெயரில் குண்டர்களுக்கு பாஜக பயிற்சியளித்து வருவதாக அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
மும்பை ஐஐடியில் 18 வயது தலித் மாணவர் தர்ஷன் சொலான்கி பி டெக் முதலாம் ஆண்டு பயின்று வந்து உள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி ஐஐடி விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார் என அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை தர்ஷனின் ஐஐடி விடுதி அறையில் தங்கி இருந்த மாணவர்களிடம் தீவிர விசாரணை செய்தனர். இதற்கிடையே சொலான்கி மரணம் ஒரு நிறுவன படுகொலை என மும்பை ஐஐடியில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டம் தெரிவித்தது.

தொடரும் போராட்டம்
தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் ஐஐடி வளாகங்களில் மர்மமான முறையில் உயிரிழப்பதன் பின்னணியில் சாதி, மத ஒடுக்குமுறையே காரணம் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த நிலையில், பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சொலான்கியின் மரணத்துக்கு நீதிகோரி மாணவர்கள் போராடி வருகிறார்கள்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
அந்த வகையில் மும்பை ஐஐடி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த முதலாம் ஆண்டு தலித் மாணவர் தர்ஷன் சொலான்கி மரணத்துக்கு நியாயம் கேட்டு இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பேரணி சென்றனர். இதில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

சிவாஜி பிறந்தநாள்
அதே நேரத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி யை சேர்ந்தவர்கள், சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளனர். அப்போது, இடதுசாரி மாணவர் அமைப்பினர் ஒரு ஆவணப் படத்தை திரையிடவும் முடிவு செய்து இருக்கின்றனர்.

ஏபிவிபி தாக்குதல்
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இடதுசாரி மாணவர் அமைப்பினர் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். அங்கிருந்த மாணவர் சங்க அலுவலகத்தில் மாட்டி வைக்கப்பட்டு இருந்த தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் படங்களையும் சேதப்படுத்திய ஏபிவிபி அமைப்பினர் சிவாஜி படத்தை அங்கு வைத்து பூஜை செய்துள்ளனர்.

தமிழ் மாணவர்கள் காயம்
ஏபிவிபி நடத்திய தாக்குதலில் நசீர் என்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவரின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோடியது. மற்றொரு தமிழ் மாணவரும் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஏபிவிபி மாணவர் அமைப்பினர் அந்த ஆம்புலன்சையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

ஏபிவிபி சொல்லும் காரணம்
படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், இடதுசாரி மாணவர் ஒருவர் சத்ரபதி சிவாஜியின் படத்தை தரையில் வைத்து அவமதித்ததாக ஏபிவிபி அமைப்பினர் தெரிவித்து உள்ளார்கள். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் பிக்பாஸ் போட்டியாளர் விக்ரமனும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு உள்ளார்.

விக்ரமன் கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு இருப்பதாவது, "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபியால் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. ஆம்புலன்ஸை கூட அவர்கள் தாக்கி உள்ளார்கள். இந்த மனித தன்மையற்ற செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

பிக்பாசுக்கு பிறகு
கல்வி நிலையங்களில் எழும் ஜனநாயக குரல்களை நசுக்க பாஜக குண்டர்களுக்கு மாணவர் அமைப்பு என்ற பெயரில் பயிற்சி அளிப்பது இதன் மூலம் நிரூபணமாகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சமூக நீதி கருத்துக்களை தெரிவித்த விக்ரமன், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடப்பு அரசியல் கூழலில் அவர் வெளிப்படையாக தெரிவித்த முதல் கண்டனமாக இது பார்க்கப்படுகிறது.
-
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications