"மேடம், அவர் வீடியோ இருக்காமே.." டக்குன்னு கேட்ட நிருபர்.. நெத்தியடியாக பதில் சொன்ன வானதி சீனிவாசன்
பட்ஜெட்டில் கோவை மெட்ரோ அறிவிப்பு தேவை என கூறுகிறார் வானதி சீனிவாசன்
சென்னை: கோவை மாநகராட்சிக்கு ஸ்மார்ட் திட்டம் குறித்த அறிவிப்பை, பட்ஜெட்டில் ஆர்வமுடன் எதிர்பார்ப்பதாக பாஜகவின் வனாதிசீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தேசிய பாஜக மகளிரணி அணி தலைவரும், அக்கட்சியின் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார்.
அப்போது அவர் சொன்னதாவது: "கோவை மாநகரில் குளங்கள் பராமரிப்பின்றி பாழாகி கொண்டிருக்கிறது.. கோவையில் குளங்களை எல்லாம் சீர்செய்வோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு சொன்னார்.. ஆனால், இன்று இங்கே குளங்களில் எல்லாம் ஆகாய தாமரைகள் நிரம்பி உள்ளன..

குறைகள்
ரேஸ்கோர்ஸ் சாலை குடியிருப்பில் உள்ள மக்கள், சாலைகளை பற்றி கேட்கிறார்கள்? சாலை பராமரிப்பில் குறைகள் உள்ளது. சாலைகளை சீரமைக்கிறேன் என்று சொன்னார்கள்.. மாநகரின் மையப்பகுதில் செல்ல முடியாத அளவுக்கு மோசமாக இருக்கிறது.. பள்ளங்களை தோண்டிபோட்டுவிட்டு, அதை மூடாமலேயே சென்றுள்ளனர்.. நடந்து முடிந்த தேர்தலில், இனிமேல் சாலைகளை சீர் செய்ய வேண்டாம், குளங்களை தூர் வார வேண்டாம், வெறும் கொலுசு மட்டும் தந்திடலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள் போல..

செந்தில் பாலாஜி
தேர்தலில் ஓடோடி உழைத்த இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, சாலைகள், குப்பைகள் விஷயத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. ஸ்மார்ட் சிட்டி விஷயத்தில், ஏற்கனவே செய்து வந்த பணிகளை தற்போதும் மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். எத்தனையோ திரைப்படங்களை முதல்வர் சென்று பார்க்கிறார்.. அதுகுறித்து கருத்து சொல்கிறார்.. அதுபோலலே, காஷ்மீர் பைல்ஸ் படத்தையும் முதல்வர் பார்க்க வரவேண்டும்..

காஷ்மீர் பைல்ஸ்
இது தொடர்பாக அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.. இது படம் அல்ல காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் தீவிரவாத குழுக்களால் எப்படி கொடுமைக்கு ஆளானார்கள் என்று காட்டும் பாடம்... எத்தனையோ மாநிலங்களில் இந்த படத்துக்கு வரிவிலக்கு அறிவித்துள்ளனர்.. அதுபோல நம் முதல்வருக்கும் வரிவிலக்கு அறிவிக்க வேண்டும். கோவையின் மெட்ரோ அறிவிப்பை பட்ஜெட்டில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.. மத்திய அரசின் பங்கும் இதற்கு தேவை.. கோவை மெட்ரோவுக்கு தேவையான உதவியை மத்திய அரசு நிச்சயம் செய்யும்" என்றார்.

பொய் செய்தி
இதையடுத்து செய்தியாளர்கள், 'தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெங்களூர் போனபோது எடுக்கப்பட்ட ஏதோ வீடியோவை, சமூகவலைதளங்களில் தற்போது சிலர் வெளியிடுவதாக சொல்லப்படுகிறதே?" என்று கேட்டனர்.. அதற்கு வானதி, என்ன வீடியோ என்று கேள்வி எழுப்பினார்.. செய்தியாளர்கள், "தமிழகத்தை பற்றியோ, மக்களை பற்றியோ தேவையில்லாமல் விவாதங்களில் பேசினால், அந்த வீடியோ வெளியிடப்படும் என்று பரவலாக பேச்சு வருகிறதே" என்று கேட்டனர்.

என்ன வீடியோ?
இதற்கு பதிலளித்த வானதி, எத்தனையோ உண்மைதன்மை இல்லாத விஷயங்கள் சமூகவலைதளங்களில் வருகிறது.. எத்தனையோ போலி செய்திகளை நீங்களும்தான் வெளியிடறீங்க.. நான் சொல்லாததை எல்லாம் போடறீங்க.. ஒரு அரசியல் கட்சி தலைவரை பற்றி சமூகவலைதளங்களில் புரளி கிளப்புவதெல்லாம் சகஜம்தான்.. எது உண்மை, எது போலி செய்திகள் என்பதை மக்களிடம் கொண்டு செல்வதுதான் மீடியாக்களுக்கு பெரிய சவாலாக உள்ளது.. சமூகவலைதளங்களில் பாஜகவினர் மீது வைக்கப்படும் மிரட்டல் அச்சுறுத்தலுக்கு பாஜகவினர் பயப்பட போவதில்லை" என்றார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications