பெட்ரோல் விலை ரூ. 100ஐ தாண்டிவிட்டதாம்.. பேப்பரில் படிச்சேன்.. என்ன செய்ய போறாங்க?.. வானதி கேள்வி!
திமுகவை சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார் வானதி சீனிவாசன்
சென்னை: "கூட்டத்தொடரில் டாஸ்மாக் பத்தி திமுக வாயே திறக்கவில்லை.. பேசுவதற்கு கையை உயர்த்தினேன்... ஆனால், சபாநாயகர் எனக்கு டைம் தரவே இல்லை.. நான் புதுசு என்பதால் சட்டமன்றத்தில் எதிர்வினையாற்ற முடியவில்லை.. நயினார் நகேந்திரன் பேசும்போதும் இப்படித்தான் நிறைய குறுக்கீடுகள் இருந்தன... " என்று பாஜகவின் வானதி சீனிவாசன் லிஸ்ட் போட்டு திமுகவை குறை சொல்லி உள்ளார்.
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்... அப்போது அவர் பேசியதாவது:
"இந்த கூட்டத்தொடர் முடிந்தே விட்டது.. மக்களிடம் எதையெல்லாம் அன்னைக்கு வாக்குறுதி தந்தாங்களோ, அதைப் பற்றி எல்லாம் முயற்சி செய்கிறோம் என்று மேம்போக்காக சொல்லி விட்டனர்.. முதல் கூட்டத்தொடரும் முடிந்துவிட்டது.

ஏமாற்றம்
டாஸ்மாக்கை படிப்படியாக குறைப்போம் என்று சொன்னார்கள்.. அதை பத்தி ஒரு வார்த்தைகூட கவர்னர் உரையில் இல்லை... அதுவும் எஸ்பி வேலுமணி கேட்ட பிறகும், முதல்வர் ஸ்டாலின் கோவை மெட்ரோ ரயில் பற்றி எந்த வாக்குறுதியும் தராதது ஏமாற்றம் அளிக்கின்றது. கோவை மக்களின் எதிர்பார்ப்பான மெட்ரோ ரயில் திட்டம் குறித்தும் எதுவுமே இல்லை.. இதை பற்றி ஆக்கப்பூர்வமான வாக்குறுதியை திமுக தராதது ஏமாற்றமாக இருக்கிறது.

பெட்ரோல்
அதேபோல, குறு சிறு நிறுவனங்களுக்கு ரூ.15,000 கோடி கொடுப்போம் என்று வாக்குறுதி தந்தனர். அதை பற்றியும் எதுவுமே சொல்லவில்லை.. பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது என்று செய்திகளில் பார்த்தேன்... மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கு ஒரே மாதிரிதான் பெட்ரோல் டீசல் கொடுக்கின்றனர்... ஆனால், மாநில அரசின் வரி எவ்வளவு?,

வாக்குறுதிகள்
அதை குறைக்க இவங்க என்ன செய்ய போகிறார்கள்? அதை பற்றியும் அறிவிப்பு இல்லை.. மாநில அரசாங்க வரியில் விலையை குறைக்கிறோம் என்றுதானே வாக்குறுதி தந்தாங்க.. அன்னைக்கு வாக்குறுதி தந்துவிட்டு, இப்போ பேசாதது ஏன்? அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் குறித்து தவறான தகவல்களை சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஜெய்ஹிந்த்
"ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தை இல்லாமல் இருப்பது பெருமை என்று எம்எல்ஏ ஈஸ்வரன் சொன்னார்.. ஈஸ்வரன் பேசியதை நாங்க எல்லாரும் பார்த்து கொண்டுதான் இருந்தோம். "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை சட்டசபையில் இல்லாத நிலை உருவாகும் என்றால், தங்கள் உயிர்களை துறந்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு இந்த சட்டசபை என்ன சொல்ல போகிறது.?

நயினார் நாகேந்திரன்
சட்டசபைக்கென்று மரபு, விதிகள் இருக்கிறது.. அமைச்சர்கள் உள்ளிட்ட அங்கு ஒரு சிலரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச கையை உயர்த்தினேன்... ஆனால், சபாநாயகர் எனக்கு டைம் தரவே இல்லை.. நயினார் நாகேந்திரன் பேசும்போதும் இப்படித்தான் நிறைய குறுக்கீடுகள் இருந்தன... எங்க கருத்தையும் சொல்வதற்கும் சட்டமன்றத்தில் இடம் தரவேண்டும்.. சட்டமன்றத்திற்கு நான் புதுசு என்பதால், உடனடியாக இதை புரிந்து எதிர்வினையாற்றவில்லை... அதனாலதான் எங்களுடைய கருத்துகளை ஊடகங்களிடம் சொல்கிறோம்.

வெள்ளை அறிக்கை
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு உதவ மத்திய அரசு தயாராக இருக்கின்றது. வேறு சித்தாந்த பின்னணியில் வந்தாலும் மத்திய அரசுடன் இணைந்து வளர்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும். வெள்ளை அறிக்கை கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போகக்கூடாது. பொறுப்பான அரசாக இந்த அரசை பார்க்கின்றோம்... பல்வேறு திட்ட பணிகளும், வேகமாக நடைபெற வேண்டிய காலம் இது.

கொள்கைகள்
மத்திய அரசுக்கு எதிராக இருப்பவர்களை, மத்திய அரசுடன் இணக்கமாக செல்லாதவர்களை, மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்களை, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்களை தான் தமிழக அரசு குழுவில் நியமித்து கொள்ளும் என்றால் தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து தான் செயல்பட வேண்டும்... இணைந்து செயல்பட்டால் தான் தமிழகத்திற்கு நல்லது.

கருத்து சுதந்திரம்
கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.. கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் பொதுவானது. பிரதமரை பற்றி திமுக முக்கிய பிரமுகர்கள் தரம் தாழ்ந்து பதிவிட்டுள்ளனர்... பழைய பதிவுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், முதலில் அந்த பதிவுகளுக்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்... அதுதான் சரியான கருத்து சுதந்திரமாக இருக்கும்" என்றார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்!












Click it and Unblock the Notifications