ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல்
சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. பாஜகவுக்கு மொத்தம் 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு அண்ணாமலை விரும்பிய தொகுதியையும் வழங்கப்படவில்லை என்று பாஜக தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாஜக தனக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளை அதிமுகவிடம் கொடுத்துவிட்டு வேறு 2 தொகுதிகளை பெற திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. பாஜகவுக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாஜகவில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுக ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்ணாமலை, கோவை மாவட்டம் சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம் ஆகியவற்றில் ஒன்றில் களமிறங்க விரும்பியதாவும், ஆனால் இந்த தொகுதிகளை அதிமுக தன்வசமே வைத்துள்ளதாகவும் பாஜக தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் தான் அண்ணாமலை தேர்தலில் இருந்து விலக விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
2 தொகுதிகளை மாற்ற பாஜக திட்டம்
இந்நிலையில் தான் தமிழகத்தில் 2 தொகுதிகளை அதிமுகவிடம் கொடுத்து வேறு 2 இடங்களை வாங்க பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பாஜகவுக்கு வழங்கப்பட்ட 27 தொகுதிகளில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டசபை தொகுதிகளும் அடங்கும். இதில் கந்தர்வகோட்டை என்பது தனித்தொகுதியாகும். இங்கு பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர் தான் போட்டியிட முடியும். இந்த 2 தொகுதிகளை மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தஞ்சாவூர் - கந்தர்வக்கோட்டை பின்னணி
அதாவது தஞ்சாவூர், கந்தகர்வக்கோட்டை சட்டசபை தொகுதிகளை அதிமுகவிடம் வழங்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு 2 தொகுதிகளை பெற பாஜக பரிசீலனை செய்து வருகிறதாம். இதில் தஞ்சாவூரில் கடந்த 2019 இடைத்தேர்தல், 2021ம் ஆண்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் டிகேஜி நீலமேகம் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். அதற்கு முந்தைய 2016, 2011 ஆகிய ஆண்டுகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல் கந்தர்வக்கோட்டையில் தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னத்துரை உள்ளார். இவர் 2021 சட்டசபை தேர்தில் அதிமுக வேட்பாளர் ஜெயபாரதியை 12,721 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். அதற்கு முன்பு 2016 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் ஆறுமுகம் வெற்றி பெற்றிருந்தார். அவர் திமுகவின் அன்பரசனை 3,407 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார்.
எடப்பாடி ஒப்புக்கொள்வாரா?
இந்த 2 தொகுதிகளிலும் ஏற்கனவே அதிமுக வென்றுள்ளது என்பதால் தஞ்சாவூர், கந்தர்வக்கோட்டை தொகுதிகளை அந்த கட்சிக்கு வழங்கிவிட்டு வேறு 2 தொகுதிகளை பெற பாஜக திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இந்த 2 தொகுதிகளை பாஜகவிடம் இருந்து பெற்றால் வேறு 2 தொகுதிகளை எங்கிருந்து வழங்குவது என அதிமுக நினைக்கிறதாம்.
ஒருவேளை பாஜக - அதிமுக இருகட்சிகளும் ஒப்புக்கொண்டால் இந்த தொகுதிகளில் அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்துவிட்டு அதற்கு பதில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத தொகுதிகளில் 2யை விட்டு கொடுக்கலாம். ஆனால் பாஜகவின் இந்த முயற்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஓகே சொல்வாரா? என்பது சந்தேகம் தான்.
எந்த தொகுதிகளை மாற்ற வாய்ப்பு?
ஏனென்றால் இந்த தேர்தலில் 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இதில் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 29 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டி உள்ளது. கோவையில் அண்ணாமலை குறிவைத்ததாக கூறப்படும் சூலூர், கவுண்டம்பாளையம், சிங்கநல்லூர் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளுக்கும் அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதனால் இந்த தொகுதிகளை ஏதேனும் ஒன்றை அதிமுக விட்டு கொடுக்க வாய்ப்பில்லை. அதேவேளையில் சென்னையில் வேளச்சேரி உள்பட 2 தொகுதிகளை பாஜக கோரி வருகிறது. இதனால் இந்த தொகுதிகளுக்கு பதில் பாஜகவுக்கு சென்னையில் 2 தொகுதிகளில் வாய்ப்பு வழங்கப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் அதிமுக - பாஜக கூட்டணியில் தற்போது வெளியாகி உள்ள இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?















Click it and Unblock the Notifications