கடுமையாக உழைத்தால் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி: அமித்ஷா அட்வைஸ்
சென்னை: பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
தமிழகம் வருகை தந்த உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் பல்வேறு மாநிலங்களில் பாஜக எப்படி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது என்பது குறித்து விவரித்தார்.

குறிப்பாக திரிபுரா, பீகாரில் அதிக இடங்களில் வென்று பாஜக அதிகாரத்தை கைப்பற்றி இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இதேபோல் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம், மேற்கு வங்கத்திலும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் தெலுங்கானா, ஆந்திராவிலும் பாஜகவால் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்றார் அமித்ஷா. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது ஆளும் அதிமுகவுடனான கூட்டணி குறித்து சில நிர்வாகிகள் அதிருப்தியும் தெரிவித்தனராம்.
இதற்கு பதிலளித்த அமித்ஷா, கூட்டணியை பற்றி கட்சி மேலிடம் பார்த்து கொள்ளும். முதலில் பாஜகவின் உள்கட்டமைப்பை நீங்க வலுப்படுத்துங்க.. பூத் அளவில் கமிட்டிகளை அமையுங்க என கூறியிருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழகத்தில் பாஜக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும் என்றார்.
இந்த ஆலோசனை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் கே.டி.ராகவன், தமிழகத்தில் பாஜகவை எப்படி வலிமைப்படுத்த வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை அமித்ஷா விளக்கினார் என்றார்.
-
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications