சைதை சாதிக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலை.. குஷ்பு, காயத்ரி ரகுராம் கூட வரவில்லை ஏன்?
சென்னை: திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொட்டிய மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குடை பிடித்தபடி பாஜக மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதனிடையே அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவை ரவுடிக் கட்சி என விமர்சித்தார்.

சைதை சாதிக்
'சாதிக் மூளையில் சிக்கலா.. பெண்கள் என்றால் உனக்கு நக்கலா'.. என்ற முழக்கத்தை எழுப்பியவாறு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திரண்ட பாஜக மகளிரணி நிர்வாகிகள் திமுக பேச்சாளரை வெளுத்து வாங்கினர். அவர்களை தொடர்ந்து கொட்டிய மழையில் மைக் பிடித்து பேசிய அண்ணாமலை, பெண்களை தவறாக பேசியவர்களை கைது செய்வதை விடுத்து பெண்களை தவறாக பேசியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை காவல்துறையினர் கைது செய்ய வந்திருப்பதாக கூறினார்.

அமைச்சர்கள் மீது சாடல்
கடந்த 16 மாதங்களாக திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரின் நடவடிக்கைகளையும் தாம் பார்த்துக் கொண்டுத் தான் இருப்பதாகவும் மனு கொடுக்க வந்தவர்களை தலையில் அடிப்பது, ஓசி என்று சொல்லி கிண்டல் செய்வது, பேச்சாளரை வைத்து ஆபாசமாக பேச வைத்து அதை அமைச்சர் வேடிக்கை பார்ப்பது என பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்வதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை கைது
திமுகவை ரவுடிக் கட்சி என விமர்சித்த அண்ணாமலை, அமைச்சர் மனோ தங்கராஜின் தூண்டுதலின் பேரில் தான் சைதை சாதிக் பாஜக பெண் நிர்வாகிகளை பற்றி தரக்குறைவாக பேசியதாக தெரிவித்தார். மழை பெய்து கொண்டே இருந்ததால் பேச்சை விரைவாக முடித்த அண்ணாமலையை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக காவல்துறையினர் கைது செய்தனர்.

மாநில தலைவர்
ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கக் கூடிய ஒருவர் மாற்றுக் கட்சியின் மேடை பேச்சாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இது போன்ற நிகழ்வுகளில் கட்சியின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நிர்வாகிகளை கலந்துகொள்ள வைத்துவிட்டு மாநிலத் தலைவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். இதனிடையே குஷ்பு, வானதி சீனிவாசன், காய்த்ரி ரகுராம் உள்ளிட்டோர் பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications