கன்னியாகுமரி, கொங்கு தவிர இதர மாவட்டங்களில் 46 பேரூராட்சி வார்டுகளில் மட்டுமே வென்ற பாஜக!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், நீலகிரி தவிர இதர 22 மாவட்டங்களில் பேரூராட்சிகளில் மொத்தம் 46 இடங்களில்தான் பாஜக வென்றுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தின் 3-வது மிகப் பெரிய கட்சி பாஜக என அக்கட்சித் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். பேரூராட்சிகளில் பாஜக மொத்தம் 230 இடங்களில் வென்றது. இதனை அடிப்படையாக வைத்து நாங்களே பெரிய கட்சி பாஜக என்றது.

காங், பாஜக
உண்மையில் இந்த 230-ல் பாஜக கன்னியாகுமரியில் மட்டும் 168 பேரூராட்சி வார்டுகளைப் பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியோ இதே அளவு இடங்களை கன்னியாகுமரியில் பெற்றிருந்தாலும் அதைப் போல இன்னொரு மடங்கு இடங்களை தமிழகம் முழுவதும் பரவலாக பெற்றுள்ளது.

பாஜக சாதிக்கவில்லை
கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், நீலகிரி பாஜக செல்வாக்கு உள்ள பகுதிகள். இவைகளைத் தவிர்த்து 22 மாவட்டங்களில் பாஜக வெறும் 46 இடங்களில்தான் வென்றுள்ளது. அதாவது கன்னியாகுமரியில் 168 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், கோவையில் 5, திருப்பூரில் 6, நீலகிரியில் 5 என கழித்துவிட்டுப் பார்த்தால் எஞ்சிய மாவட்டங்களில் பாஜக அப்படி ஒன்றும் சாதித்துவிடவில்லைதான்.

தென்காசி
குறிப்பாக தென்காசியில் 12 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ளது பாஜக. அதேபோல் தூத்துக்குடியில் 6 நகராட்சி கவுன்சிலர்கள் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளனர்.

ஈரோட்டில் பாஜக
ஈரோட்டில் 6 பேரூராட்சி வார்டுகளில் வென்றுள்ளது பாஜக. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் 3 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 3 பேரூராட்சி உறுப்பினர்களையும் தேனியில் 3 பேரூராட்சி உறுப்பினர்களையும் பெற்றிருக்கிறது அக்கட்சி. ராமநாதபுரத்தில் 3 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 பேரூராட்சி உறுப்பினர்களை கொண்டிருக்கிறது பாஜக. சேலத்திலும் 3 பேரூராட்சி உறுப்பினர்கள் பாஜகவுக்கு கிடைத்துள்ளனர்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications