தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லாது.. ஒரே போடுதான்.. சு.சுவாமி "சுளீர்".. இதுதான் காரணமாம்!
சென்னை: தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை அதிமுகவுடன் சேர்ந்து வெற்றிபெற்று எப்படியாவது ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்று பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு அதிமுக 20 இடங்களை ஒதுக்கி உள்ளது.
பாஜகவிற்கு 20 இடங்கள் ஒதுக்கி உள்ள நிலையில் எந்தெந்த தொகுதிகளை பாஜகவிற்கு கொடுக்க வேண்டும் என்று நேற்று அதிமுக முடிவு செய்தது. இன்னும் இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. சென்னையில் சில இடங்கள், சில தென் மாவட்ட தொகுதிகள், கொங்கு மாவட்டத்தில் சில தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது.

நம்பிக்கை
பாஜக இந்த முறை கண்டிப்பாக அதிக அளவில் எம்எல்ஏக்களை சட்டசபைக்கு அனுப்பும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. 20 இடங்களில் போட்டியிடுகிறோம், குறைந்தது 8-10 எம்எல்ஏக்களை அனுப்பலாம் என்று பாஜக நம்புகிறது. ஸ்டார் வேட்பாளர்களை மட்டுமே களமிறக்கலாம் என்று பாஜக நினைக்கிறது.

ஆலோசனை
இதற்கான ஆலோசனைகளை பாஜக கடந்த ஒரு வாரமாக செய்து வருகிறது. வானதி சீனிவாசன், எச். ராஜா, எல் முருகன், குஷ்பு, நமிதா ஆகியோர் பாஜக சார்பாக கண்டிப்பாக போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதுபோக மீதமுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

வெற்றிபெறாது
இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக வெற்றிபெறாது என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தனது பேச்சில், தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது.பாஜக 2 அல்லது 3 தொகுதியில் வெல்லலாம், இல்லாவிடில் அதிலும் வெல்லாது. பாஜக என்பது தேசிய கட்சி, தேசிய கட்சியான பாஜக தனித்து போட்டி இருக்க வேண்டும். ஆனால் தமிழக பாஜக அந்த முடிவை எடுக்கவில்லை.

தனித்து போட்டி
வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து நிற்க வேண்டியதுதான் முக்கியம். ஆனால் பாஜக அதை செய்யவில்லை என்று எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டு இருக்கிறார். தமிழகத்தில் பெரிய கூட்டணியில் பாஜக இடம்பெற்று இருந்தாலும் கூட ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications