பாஜகவிற்கு "சவுக்கடி".. லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காது! முன்னேறும் "இந்தியா".. பரபர கணிப்பு
சென்னை: லோக்சபா தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது, பாஜக கூட்டணி, இந்தியா கூட்டணி இரண்டிற்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 7-8 மாதங்களே உள்ளன. தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் 26 கட்சிகள் சேர்ந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதில் திமுக, காங்கிரஸ் பிரதான கட்சியாக உள்ளது.

இந்த தேர்தல் தொடர்பான பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி எத்தனை இடங்களை வெல்லும் என்று புதிய கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்து உள்ளது. ஸ்மால் பாக்ஸ் இந்தியா சர்வே என்ற அமைப்பு இந்த புதிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,
தமிழ்நாட்டில் திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களை வெல்லும்
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி - 03 இடங்களை வெல்லும்
தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில்வென்றது. அதிமுக 1 இடத்தில் வென்றது. இந்த முறை திமுக கூட்டணி 2 இடங்களை இழக்கும். பாஜக கூட்டணி கூடுதலாக இரண்டு இடங்களை பெறும். அதாவது தமிழ்நாட்டில் இருந்து பாஜக கூட்டணிக்கு 3 எம்பிக்கள் வருவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. இவர்கள் பாஜக கட்சியா, அதிமுக கட்சியா என்பது தெரிவிக்கப்படவில்லை.
இது போக கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி - 18 (-1) இடங்களை வெல்லும்
வலதுசாரி கூட்டணி - 02 (+1) இடங்களை வெல்லும்
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி - ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று கணிக்கப்பட்டு உள்ளது.
கணிப்பு: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இப்போதே தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் வெளியாக தொடங்கி உள்ளன. பல்வேறு அமைப்புகள் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
மேற்கு வங்கம்: லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று ஸ்மால் பாக்ஸ் இந்தியா சர்வே கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

அதில், மேற்கு வங்கத்தின் மொத்த இடங்கள் (42)
பாஜக என்டிஏ கூட்டணி - 08
இந்தியா - 34 இடங்கள் வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது.
கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி வென்ற 18 இடங்களில் இருந்து 10 இடங்கள் குறைந்து 8 இடங்கள் மட்டுமே பாஜக வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் லோக்சபா தேர்தல் கருத்துக்கணிப்புபடி- ஜம்மு காஷ்மீர் மொத்த இடங்கள் (06)
பாஜக என்டிஏ கூட்டணி - 04
இந்தியா - 02 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் டெல்லி மொத்த இடங்கள் (7)
பாஜக என்டிஏ கூட்டணி- 05
இந்தியா - 02 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஒடிசா மொத்த இடங்கள் (21)
பாஜக என்டிஏ கூட்டணி - 09
இந்தியா - 02
பகுஜன் ஜனதா தளம்- 10 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
கணிப்புகள்: சத்தீஸ்கர் மொத்த இடங்கள் (11):
பாஜகவின் என்டிஏ கூட்டணி - 04
இந்தியா - 07
தெலுங்கானா மொத்த இடங்கள் (17):
பாஜகவின் என்டிஏ கூட்டணி - 03
சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி- 08
இந்தியா கூட்டணி - 05
ஓவைசியின் எம்ஐஎம் கட்சி - 01
சண்டிகர், அந்தமான் மற்றும் நிக்கோபார்,
பாஜகவின் என்டிஏ கூட்டணி - 01
இந்தியா கூட்டணி - 01
மத்தியப் பிரதேசத்தின் மொத்த இடங்கள் (29)
பாஜகவின் என்டிஏ கூட்டணி - - 20
இந்தியா - 09

மொத்தமாக எத்தனை: லோக்சபா கருத்துக்கணிப்பு மொத்த இடங்கள் : 543, மெஜாரிட்டி பெற 272
இந்தியா கூட்டணி - 243
பாஜகவின் என்டிஏ கூட்டணி - 255
மற்றவை - 45
ஆனால் இந்த கருத்து கணிப்புகள் எல்லாமே அப்படியே நடக்கும் என்றும் சொல்ல முடியாது. காரணம் தேர்தலுக்கு இன்னும் பல காலம் உள்ளது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் உள்ளன. அப்படி இருக்க என்ன வேண்டுமென்றாலும் அரசியல் களத்தில் நடக்கலாம்.
8 மாதங்கள் என்பது தேர்தல் அரசியல் களத்தில் மிக நீண்ட காலம் ஆகும். அதனால் கருத்து கணிப்புகள் அப்படியே நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் அரசியல் ரீதியாக கருத்து கணிப்புகள் ஒரு பிம்பத்தை உருவாகும். முக்கியமாக அரசியல் ரீதியாக தேர்தல் இப்படி செல்ல வாய்ப்பு உள்ளது என்று கணிப்பை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications