‛அண்ணாமலையே ஜெயிக்கமாட்டார்’.. 40 தொகுதியில் வெல்வார்கள் என்பது பாஜகவின் பேராசை.. திமுக பதிலடி
சென்னை: ‛‛தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணி 40 இடங்களில் வெல்லும் என்பது அண்ணாமலையின் பெரிய பேராசை. அது நடக்காது. அண்ணாமலையை கோவை தொகுதியில் ஜெயிக்க மாட்டார்’’ என திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்தது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு லோக்சபா தொகுதி என 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்கள் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது.
இதற்கிடையே தான் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பேட்டிகளின்போது, ‛‛தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் பாஜக மற்றும் தங்களின் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்’’ என நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் தான் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் வெல்வோம் என அண்ணாமலை கூறியிருக்கிறார். அது அவரது அதீத நம்பிக்கை மற்றும் பேராசை. லோக்சபா தேர்தலை பொறுத்தமட்டில் பாஜக பணத்தின் மூலம் எதிர்கொண்டு வருகிறது.
எனக்கு வந்த செய்தியின்படி கோவையில் கூட அண்ணாமலை ஜெயிக்கப்போவது இல்லை என்பது தான். பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடந்த 10 ஆண்டு ஆட்சியின் செயல்பாடு தொடர்பாக பிரசாரம் செய்கிறார்களா என்றால் அப்படி எதுவும் இல்லை. ஏனென்றால் அவர்கள் 10 ஆண்டு ஆட்சியில் செயல்படவில்லை. அவர்கள் எதிர்க்கட்சியினரை மட்டுமே தாக்கி பேசி வருகின்றனர்.
ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி மக்களுக்காக செய்த திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்யாமல் தவறான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். பொய்களை கூறி வருகின்றனர்’’ என பதிலடி கொடுத்துள்ளார்.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக












Click it and Unblock the Notifications