"5 தாமரைகள்".. பாஜகவில் ஊழலா.. பறந்த ரிப்போர்ட்.. கொந்தளித்த டெல்லி தலைமை.. என்னாச்சு?
பாஜக தமிழக தலைவர்கள் மீது புகார் ஒன்று கிளம்பி உள்ளது
சென்னை: என்னது பாஜகவில் ஊழலா? என்று அனைவரும் அதிர்ச்சியில் வாயை பிளக்கின்றனர்.. அப்படி ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல்தான் தற்போது தமிழக அரசியலை வட்டமடிக்க ஆரம்பித்துள்ளது..!
தமிழகத்தில் பல வருடமாகவே, கால் ஊன்ற பாஜக அரசு முயன்று வருகிறது.. இந்த முறைகூட நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் நடந்த குறைந்தபட்சம் 3 மாநிலங்களிலாவது பாஜக ஆட்சியை பெற நினைத்து.. பாடுபட்டு உழைத்தது..
ஆனால், மேற்கு வங்கத்தில் மம்தா ஒற்றை நபராக கெத்து காட்டி விட்டார்.. கேரளாவிலும் சரி, நமக்கும் சரி, பாஜகவால் எதுவுமே செய்ய முடியாத சூழலில் அசாமில் மட்டும் ஆட்சியை தக்க வைத்தது.

எல்.முருகன்
எனினும் இந்த தேர்தலில் பாஜக சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெற்றுள்ளதை மறுக்க முடியாது.. குறிப்பாக, எல்.முருகன் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, பலவித மாற்றங்களும், அதிரடிகளும் கையில் எடுக்கப்பட்டன.. பல்வேறு கட்சிகளிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள் கட்சிக்கு தாவி வந்தனர்.. கிட்டத்தட்ட 6 மாத உழைப்புக்குபிறகு, ஓரளவு வலிமையான கட்சியாக பாஜக உருவெடுத்தது.

20 சீட்
அதனால்தானோ என்னவோ 70 சீட் கேட்க ஆரம்பித்தார் முருகன்.. ஆனால், அதிமுக ஒதுக்கிய 20 சீட்டை பெற்றுக் கொண்டு தேர்தலை சந்தித்தது.. 20 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தபோதே, ஒருவித பரபரப்பு தேர்தல் களத்தில் தொற்றிக் கொண்டது.. குறிப்பிட்ட 5 தொகுதிகள் முக்கிய கவனத்தையும் ஈர்த்தது.. காரணம், அந்த தொகுதிகளின் வலுவான வேட்பாளர்கள்தான். எனவே, திமுக, காங்கிரஸ், மநீம வேட்பாளர்களுக்கு இந்த பாஜக வேட்பாளர்கள் கடுமையான டஃப் கடைசிவரை தந்தார்கள்.

சட்டமன்றம்
இதில் 4 பேர் வெற்றிபெற்று சட்டசபைக்குள்ளும் நுழைந்துவிட்டனர்.. சட்டசபை ஆரம்பித்ததும், திமுகவை சரமாரி கேள்விகளையும் கேட்டனர்.. ஆனால், பாஜகவுக்குள்ளேயே ஒருவித சிக்கல் வெடித்து கிளம்பி உள்ளது.. அதுவும் ஊழல் விவகாரம் என்பது அதிர்ச்சியாக உள்ளது.. தேர்தல் செலவினங்களுக்காக தமிழக பாஜகவிற்கு 500 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்ததாம் அக்கட்சியின் அகில இந்திய தலைமை.

நிதி ஒதுக்கீடு
இந்தத் தொகையை விவிஐபி வேட்பாளர்கள் பலருக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளனர். தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பொதுவான அனைத்து தேர்தல் செலவுகளுக்காகவும் இப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாம். வழக்கமாக எல்லாக் கட்சிகளும் செய்வதுதான் இது.

புகார்கள்
ஆனால், தேர்தல் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட அந்த தொகை, முறையாக செலவிடப்படவில்லை என்றும், அதில் ஊழல் நடந்திருப்பதாகவும் கட்சியின் தேசிய தலைமையிடம் தொடர்ச்சியான புகார்கள் குவிந்தன. இதனையடுத்து மத்திய உளவுத்துறையின் மூலம் ரகசிய விசாரணையை மேற்கொண்டது டெல்லி மேலிடம்.. இறுதியில் அந்த புகார் உண்மைதான் என்ற விவகாரம் தெரிந்து கொந்தளித்து விட்டதாம்..

பிரதமர் மோடி
எப்படியாவது இந்த போரில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்றுதான் அமித்ஷா விரும்பினார்.. இதற்காகவே பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம், நிலவரம் என்ன? என்று கேட்டறிந்தவாறே இருந்தார்.. அடிக்கடி எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு கொண்டு, கள நிலவரம் பற்றியும் கேட்டறிந்து கொண்டே இருந்தனர்.. ஆனால், முக்கியமாக நம்பிய 5 பேர் மீதும் புகார் பறக்கவும்தான் ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டதாக தெரிகிறது.

கல்தா
இதுகுறித்த விசாரணையையும் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள்.. ஒருவேளை இந்த புகார் நிரூபணமாகும் பட்சத்தில் பலருக்கும் கட்சிப் பதவிகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் கல்தா கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.. மத்திய பாஜகவை பொறுத்தவரை, ஊழலுக்கு எதிரான கட்சி என்ற வாசகத்தை முன்வைத்தே ஆட்சியை பிடித்தது.. அதனால்தான், அதிமுக, உள்ளிட்ட பல கட்சிகளில் ஊழல் புரிந்தவர்களின் லிஸ்ட்டை வைத்து கொண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது..

பாஜக
அப்படித்தான் ப.சிதம்பரம், டிடிவி தினகரன் உட்பட பலரும் "உள்ளே" போய் வந்துள்ளனர்.. இந்த லிஸ்ட்டை வைத்துக் கொண்டு, பல மாநிலங்களில் தங்கள் காரியத்தையும் சாதித்து வருகிறது.. அப்படி இருக்கும்போது, பாஜக கட்சியினரே.. அதுவும் சீனியர்களே.. அதுவும் நம்ம தமிழ்நாட்டிலேயே என்பது மகா ஷாக்காக இருக்கிறது..!
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications