“குருஜீ என அழைப்பார்.. செங்கோட்டையனுக்கு என் மீது என்ன கோபம் என தெரியவில்லை!” - நயினார் நாகேந்திரன்
சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும், அவரை டெபாசிட் இழக்க செய்வதுதான் எங்கள் முதல் பணி என்று, அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய தவெக நிர்வாகியுமான செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு நயினார் நாகேந்திரனின் பரவலாக ஷேராகி வருகிறது.
ஒரு கவுன்சிலர் கூட இல்லை.. நேர அப்படியே முதல்வர் பதவிக்கு ஆசை படுறாங்க.. என விஜய் மற்றும் தவெக கட்சிய தொடர்ந்து நயினார் நாகேந்திரன் விமர்சித்து வந்திருந்தார். இதனால் டென்ஷன் ஆன, செங்கோட்டையன் "அவர் எங்கெல்லாம் சென்றார்.. எத்தனை தோல்விகளை சந்தித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்று அவர் நம்மை பார்த்து பேசுகிறார். இப்படி இருப்பவர், ஒரு தொகுதியில் கூட தவெக வெல்லாது என்று சவால் விடுகிறார்.

நான் சொல்கிறேன் கேளுங்கள், நயினார் எங்கு போட்டியிட்டாலும் அவரை டெபாசிட் இழக்கச் செய்வோம். அதில்தான் தவெக வெற்றி அடங்கியிருக்கிறது. அந்த வகையில் நாம் பணியாற்ற வேண்டும். யார் நம்மை தவறாக பேசுகிறார்களோ அவர்களுக்கு இளைஞர்களான நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். எந்த தொகுதியில் போட்டியிடலாம் என நயினார் நாகேந்திரன் யோசித்துக்கொண்டிருப்பார். ஆனால், 234 தொகுதிகளிலும் விஜய்தான் போட்டியிடுகிறார்" என்று ஈரோட்டில் தவெக கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியிருந்தார்.
இதற்குதான் தற்போது நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். "நான் வயதில் சிறியவனாக இருந்தாலும், என்னை குருஜீ என்றுதான் அண்ணன் செங்கோட்டையன் அழைப்பார். அவருக்கு என் மேல் என்ன கோவம் என்று தெரியவில்லை. நான் நியாயமான விஷயத்தைதான் சொன்னேன். அவர் இன்று ஒரு இயக்கத்தில் சென்று சேர்ந்திருக்கிறார். அதைப்பற்றி நான் குறை சொல்லவில்லை.
அந்த இயக்கம் இன்னும் வளர்ந்து வரவில்லை. எடுத்த உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்று சொன்னால் எந்த விதத்தில் நியாயம் என்றுதான் நான் கேட்டேன். என்னை டெபாசிட் இழக்க செய்வதற்கு, அவர் திருநெல்வேலியில் வந்து போட்டியிடப்போகிறாரா? என தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications