"திருட்டு ரயில்.. தத்தி.." அரசியல் தரத்தை பாதாளத்துக்கு தள்ளிய பாஜகவின் புதிய விளம்பர பாடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவை விமர்சித்து பாஜக புதிய விளம்பர பாடலை வெளியிட்டுள்ளது. வழக்கமாக அரசியல் கட்சிகள் அரசியல் ரீதியாக விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில், பாஜகவின் இந்த விளம்பர பாடல் அரசியல் தரத்தை பாதாளத்துக்கு தள்ளும் வகையில் அமைந்துள்ளது.

லோக்சபா தேர்தல் தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. வேட்பு மனு தாக்கல், பரிசீலனை, இறுதி வேட்பாளர் பட்டியல் என அனைத்து முடிந்துவிட்டது. தற்போது பூத் சிலிப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றது.

BJP s new ad song has pushed the political standard to the New low

இது ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் அரசியல் கட்சிகள் பிரசாரம், விளம்பரம் செய்வது என தமிழக அரசியல் களம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. தேர்தல் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். பிரசாரத்தை தாண்டி அரசியல் கட்சிகள் சார்பில் டிவிக்கள், இணையதளங்கள், சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சிகள் விளம்பரங்கள் செய்து வருகின்றன.

முன்னணி நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரம் என திமுக - அதிமுக போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகின்றன. அதேபோல், டிவிக்களிலும் செய்த சாதனைகளை பட்டியலிட்டு திமுகவும், மாநில அரசு நிறைவேற்றதாக வாக்குறுதிகளை பட்டியல் போட்டு அதிமுகவும் விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன.

அதேபோல், மத்திய அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளையும் பட்டியலிட்டு நிமிடத்திற்கு நிமிடம் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. ஒரு காலத்தில் சுவர் விளம்பரம் மற்றும் துண்டு பிரசுரம், நோட்டீஸ்களில் மிகுந்த கவனம் செலுத்தி வந்த அரசியல் கட்சிகள் தற்போது டிஜிட்டல் யுகம் என்பதால் தொலைக்காட்சி, இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

திரைப்படங்கள் டிரெயிலர் விடுவது போல வாக்காளர்களை கவரும் விதமாக அரசியல் கட்சிகள் தத்ரூபமாக படம் பிடித்து விளம்பரங்களை வெளியிடுகின்றன. அரசின் திட்டங்களால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருப்பதாக ஆளும் கட்சிகள் விளம்பரங்கள் வெளியிடுகிறது என்றால், மிகுந்த கஷ்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் விளம்பரங்கள் செய்கின்றன.

இதற்காக துணை நடிகர்கள் கூட ஈடுபடுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக, திமுகவிற்கு ஒரே ஒரு பாட்டி விளம்பரத்தில் தோன்றியது கூட பேசுபொருளானது. சுவர் விளம்பரம் துண்டு பிரசுரத்தை எல்லாம் தாண்டி தற்போது டிஜிட்டல் யுக்தியை பக்காவாக கையாண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், நாள்தோறும், திமுக, அதிமுக விளம்பரங்களை பார்க்க முடிகிறது. தற்போது பாஜக சார்பில் ஒரு தேர்தல் பிரசாரம் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. பங்காளி என்று எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்துள்ளன.

பாஜக வெளியிட்ட இந்த விளம்பரம் முழுக்க முழுக்க தனி மனித தாக்குதல் அதிகமானதாக உள்ளது. வழக்கமாக அரசியல் கட்சிகள் அரசியல் ரீதியாக விமர்சனஙக்ளை முன்வைக்கும்.. எலியும் பூனையுமாக அதிமுக - திமுக அரசியல் செய்தாலும் கூட விமர்சனங்களை அரசியல் ரீதியாக வைக்கின்றன.

ஜெயலலிதா கருணாநிதி போன்றோர் எதிர்தரப்பு ஆட்சியில் நடந்த அவலங்களை வீடியோக்களாக போட்டு டிவிகளில் விளம்பரம் செய்த காலம் உண்டு. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி ஆகியோரும் அப்படித்தான். ஆனால் என்றுமே தனிமனித தாக்குதலை ஒரு கட்சியின் மேலிடம் வெளியிடும் விளம்பரம் செய்தது கிடையாது.

இதேபோல் பாஜக வெளியிட்டுள்ள இந்த பிரசார வீடியோவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியை திருட்டு ரயிலில் ஏறி வந்ததாக விமர்சித்து வரிகள் இடம் பெற்றுள்ளன. கருணாநிதி, திருட்டு ரயிலில் ஏறி சென்னை வந்ததாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படாலும், அவ்வாறு ரயிலில் ஏறி வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது திமுகவினர் முன்வைக்கும் வாதமாக உள்ளது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பது போன்று... ஆதாரப்பூர்வமற்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து பிரதான அரசியல் கட்சியான பாஜகவே பிரசார வீடியோ வெளியிட்டு உள்ளது. அதேபோல், முதல்வர் மு.க ஸ்டாலினையும் மூன்றாம் தர பேச்சாளர்கள் விமர்சிக்கும் தொனியில் தத்தி என்ற வார்த்தையுடன் விமர்சித்து பாஜக கடுமையாக சாடியுள்ளது.

நாகரீக அரசியலை பறைசாற்றும் தமிழக அரசியலில் இதுபோன்ற அநாகரீகமாக விமர்சிக்கும் கலாசாரத்தை பாஜக தொடங்கியிருப்பதாக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+