பறந்த உத்தரவு.. "புள்ளி"களை தட்டி தூக்க தயாராகும் பாஜக.. கலக்கத்தில் அதிமுக.. ரெடியாகும் திமுக..!
புதுச்சேரி போலவே பாஜக, தமிழகத்திலும் மெகா திட்டம் வைத்துள்ளதாம்
சென்னை: அடுத்த ஆட்டத்தை ஆட தொடங்கிவிட்டதாம் பாஜக.. அந்த வகையில் ஒரு செய்தி அடிபட தொடங்கி உள்ளது.. இந்த முறை "வலை"யை அதிமுகவில்விசி உள்ளதாம் பாஜக மேலிடம்..!
Recommended Video
எல்லாரும் தேர்தலை முன்வைத்து அரசியல் செய்வார்கள் என்றால், பாஜக தேர்தலுக்கு பிறகுதான் அரசியலையே கையில் எடுக்கும்..
வடமாநிலங்களில் இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகி வருவதால், பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவே ஆட்சியை பிடித்துள்ளது.. அல்லது ஆட்சியில் பங்கு வைத்துள்ளது.

யுக்தி
அப்படித்தான் இப்போதுகூட புதுச்சேரியில் நுழைந்துள்ளது.. அதுபோலவே, இந்த யுக்தியை தமிழகத்தில் பயன்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளது.. எப்படியும் அதிமுக படுமோசமாக தோற்கும், அதனால் நம்மிடம்தான் வர வேண்டும் என்று போட்டு வைத்திருந்த கணக்கு தவிடுபொடியாகிவிட்டது.. பலமான எதிர்க்கட்சியாக அதிமுக உட்கார்ந்துள்ளது..

பாஜக பிளான்
எனவே, இந்த எம்எல்ஏக்களில் ஒருசிலரை மட்டும் தங்கள் பக்கம் இழுக்க பாஜக பிளான் செய்து வருவதாக ஏற்கனவே நாம் பதிவிட்டிருந்தோம். அதுமட்டுமல்ல, இதற்கான அசைன்மென்ட்டை நயினார் நாகேந்திரனிடம் பாஜக மேலிடம் நம்பி தந்துள்ளதாகவும் சொல்லி இருந்தோம்.. இதற்கு காரணம், அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் பலரும் இப்போதுகூட நயினாருடன் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார்கள்..

திமுக
நட்பு அடிப்படையில் நல்ல இணக்கமான போக்கும் உள்ளது.. அதனடிப்படையில் இணக்கமானவர்களுடன் பேசி பாஜக பக்கம் கொண்டு வரலாம் என்பதலேயே, இப்படி ஒரு அசைன்மென்ட் தந்திருக்கலாம் என்கிறார்கள். இப்போது மற்றொரு விஷயமும் கசிந்து வருகிறது.. திமுக தலைமையிலான அரசு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை தூசி தட்டி எடுக்கப்போவதாக சொல்லப்பட்டு வருகிறது..

பதிவு
இதை முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய பிரச்சாரங்களில் மறக்காமல் பதிவும் செய்தும் வந்தார்.. இதற்கான சட்டப்பணிகளும் துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் நிறைய முன்னாள்கள் கதிகலங்கி போயுள்ளனாராம். இவர்களுக்கு எப்படியும் தங்கள் உதவி தேவைப்படும் என்றும், அதனால் விரைவில் தங்களை நாடி வருவார்கள் என்றும் பாஜக நம்புகிறது.

பலம்
அந்த வகையில், 4 உறுப்பினர்கள் இப்போதைக்கு சட்டமன்றத்தில் உள்ள நிலையில், பலத்தை பெருக்கவே நயினாரை களத்தில் இறக்கி விட்டுள்ளது பாஜக... அதிமுக புள்ளிகளுடன் நயினாருக்கு நல்ல நட்பு இருந்தாலும், அவர்களை பற்றி அக்குவேறு, ஆணிவேறாக தெரிந்து வைத்திருப்பவர் நயினார்தான்.. அவர்களின் அரசியல் பலவீனங்களையும் அறிந்தவர்..

பாஜக
எனவே, திமுக யார் மீது சட்டநடவடிக்கை எடுக்க போகிறதோ, அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் அசைன்மென்ட்டும் நயினாருக்கு தரப்பட்டுள்ளதாக தெரிகிறது... இப்போது ஒரு சில மாஜிக்கள் பாஜகவிடம் தஞ்சமடைய தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது... இதனால் அதிமுகவின் உறுப்பினர் பலம் குறைவதுடன், கட்சியும் பலவீனமாகும் சூழல் உள்ளது.. அதிமுகவின் அழிவுதான், தங்களின் வெற்றி என்ற ரீதியில் பாஜக பார்வை திரும்பி உள்ளது..!












Click it and Unblock the Notifications