திடீரென பாஜக தந்த அசைன்மென்ட்.. தட்டி தூக்கும் நபர்கள் யார்.. "10 தொகுதிகள்".. வெலவெலக்கும் கட்சிகள்
பாஜக புது அசைன்மென்ட்டை தன்னுடைய கட்சிக்கு தந்துள்ளது
சென்னை: இந்த முறை அந்த தாமரையை மலர வைத்தே தீருவது என்ற கங்கணம் கட்டி கொண்டுள்ளதால், படுசுறுசுறுப்பில் பாஜக தேர்தல் யுக்திகளில் ஆர்வம் காட்டி வருகிறது..!
வரப்போகிற தேர்தல் அதிமுக, திமுகவுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பாஜகவுக்கும் முக்கியம்.. முக்கால்பாக தேசத்தை தன் கைப்பிடியில் வைத்துள்ள நிலையில், தென்மாநிலங்களில் அதுவும் தமிழகத்தை தன்னகத்தே கொண்டு வர முடியாமல் திணறி கொண்டிருக்கிறது.
அதற்காக பல வியூகங்களையும் கையில் எடுத்துள்ளது.. இதை அடிப்படையாக வைத்து ஒருசில அசைன்மென்ட்டுகளையும் அக்கட்சிக்கு ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அமித்ஷா
அந்த வகையில் தொகுதியில் முழு கவனத்தை செலுத்துவதுதான் முதல் குறியாக உள்ளது.. அமித்ஷாவை லீலா பேலஸ் ஓட்டலில் சந்தித்து அதிமுக தலைமை சீட் விஷயமாக பேச்சை எடுக்கும்போதே, வெறும் 5 சீட்டில்தான் ஆரம்பித்தனராம்.. இதனால் அதிர்ந்து போன அமித்ஷா மெல்ல மெல்ல பேசியே, சீட் எண்ணிக்கை அதிகமாகி 20 என்று வந்து முடிந்துள்ளது.. 60 கேட்டால் 20 தருகிறாரே என்று எடப்பாடியாரின் சாமர்த்தியத்தை கண்டு அமித்ஷா வியந்து போனாலும், இந்த 20 சீட்களில் குறைந்தது 10 இடத்திலாவது வென்று காட்ட வேண்டும் என்ற முடிவில் உள்ளதாம்.

முருகன்
பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அனைவருமே தேர்தல் பணிகளை துவக்கி மக்களை சந்தித்து வருகின்றனர், பாஜக போட்டியிட உள்ள, 20 தொகுதிகளிலும், வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. நுாற்றுக்கு நுாறு என்று அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று எல்.முருகன் நேற்றைய தினம்கூட நம்பிக்கையுடன் சொல்லி இருந்தாலும், 20-ல் 10 தொகுதிகளில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற பிளான்கள் வகுக்கப்பட்டு வருகிறதாம்.

ஒத்துழைப்பு
சென்ற முறை எம்பி தேர்தலில், மண்ணை கவ்வ காரணமே, அதிமுக கூட்டணியின் ஒத்துழைப்பு தொகுதிகளில் சரிவர கிடைக்கவில்லை என்று பாஜக சொல்லி கொண்டே இருந்த நிலையில், அதற்கான முன்னெடுப்புகளில்தான் தற்போது இறங்கி உள்ளதாம்.. எந்தவித லோக்கல் பாலிட்டிக்ஸ் ஆக இருந்தாலும், அதை அவ்வப்போதே பேசி தீர்த்து கொண்டு கள வேலையில் ஜரூராக இறங்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதாம். பாஜக குறி வைத்துள்ள 10 தொகுதிகளில் திமுகவே பிரதானமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

திமுக
இதற்கு அடுத்ததாக, யாரெல்லாம் அதிருப்தியில் உள்ளார்களே, அவர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்குவது அடுத்த அசைன்மென்ட்டாக இருக்கிறது.. இது திமுக என்றில்லை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கமல், என எந்த கட்சியாக இருந்தாலும் சரி, சீட் கிடைக்காதவர்களையே குறி வைத்து பாஜக தன் வியூகத்தை வலைவிரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, அதிமுகவில் சீட் கேட்டு கிடைக்காத எம்எல்ஏக்கள், ஏற்கனவே தலைமை மீது அதிருப்தியில் உள்ள மூத்த தலைகள் போன்றவர்களை பாஜகவுக்குள் கொண்டு வர முயற்சிகளையும் கையில் எடுக்கும்படி உத்தரவு போட்டுள்ளதாம்.

சொந்த கட்சி
அப்படி யாராவது சிக்கினால், உடனே தவி, உடனே சீட் என்ற வாக்குறுதிகளையும் பாஜக தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதுவரை சொந்த கட்சிக்காக யாரெல்லாம் செலவு செய்தும், சீட் கிடைக்காமல் இருட்டடிப்புக்கு ஆளானார்களோ, அவர்களுக்கும் வலை விரித்துள்ளதாம் பாஜக.. இதுதான் அதிமுக, உட்பட பல கட்சிகளை கலக்கத்தில் வைத்து வருகிறது. வழக்கமாக தேர்தல் சமயங்களைவிட, தேர்தல் முடிந்த பிறகுதான் பாஜகவின் அதிரடி ஆட்டம் அந்தந்த மாநிலங்களில் ஆரம்பமாகும்.. அதே யுக்தியை தமிழகத்தில் கையாள வாய்ப்பிருந்தாலும், தேர்தல் சமயத்திலும் பாஜக பலே வியூகம் அமைத்து வருவது மற்ற கட்சிகளையே வியப்பில் ஆழ்த்தி வருகிறதாம்..!
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications