"ஹைஜாக்" பாஜக .. கறார் பிடிவாதம்.. "அந்த" எம்எல்ஏக்களுக்கு மட்டுமே குறி.. விறுவிறுப்பாகும் களம்
புதுச்சேரியில் ஆட்சி அமைத்த பாஜக அடுத்த பிளான் போடுகிறது
சென்னை: என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களையே குறிவைக்கிறதா பாஜக என்ற கேள்வி புதுச்சேரி அரசியலில் எழுந்துள்ளது.
புதுச்சேரிக்குள் பாஜக கால் வைத்ததில் இருந்தே, ஆட்சியை எப்படியாவது பிடித்தாக வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது.. வழக்கம்போல, அங்கும் மாற்று கட்சியில் இருக்கும் உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் இறங்கிவிட்டது.
ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்று ஒருமாசம் ஆகியும், இன்னும் அமைச்சரவை ரெடியாகவில்லை.. மொத்தம் 16 இடங்களில், 10-ல் என்.ஆர்.காங்கிரஸும், 6 தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றன.

நமச்சிவாயம்
நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவியும், 2 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியையும் தங்களுக்கு தரப்போகிறீர்கள் இல்லையா என்று ரங்கசாமிக்கு செக் வைத்து வருகிறது பாஜக. ஆனால், பாஜக தரும் எந்த அழுத்தத்திற்கும் ரங்கசாமி மசியவில்லை... இப்போது 12 எம்எல்ஏக்களாக பாஜக பலம் உயர்ந்து நின்றாலும், ரங்கசாமிக்கு டென்ஷன்தான் எகிறுகிறது.

பாஜக
துணை முதல்வர் பதவியை கேட்டு கேட்டு பார்த்து நொந்துபோன பாஜக, இப்போது பொதுப்பணித்துறை கலால்துறை, உள்துறை போன்றவற்றை தங்களுக்கு தர வேண்டும் என்று மறுபடியும் ரங்கசாமிக்கு பிரஷர் தந்து வருகிறது.. இதற்கும் ரங்கசாமி வாய் திறக்கவில்லை.. இதனால் உச்சக்கட்ட கடுப்பான பாஜக, பேசாமல் என்.ஆர். காங்கிரஸை உடைத்து, அதைவைத்து ஆட்சியை கைப்பற்றுவதுதான் என்ற முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பிளான்
சில சமயம் ரங்கசாமியிடம் பாஜக பணிவது போல தெரிகிறது.. சில சமயம், பாய்வது போல தெரிகிறது.. எது உண்மையான நிலைப்பாடு என்று இப்போது வரை தெரியவில்லை.. ஆனால், இன்னொரு பிளானையும் பாஜக கையில் எடுத்துள்ளதாம்.. மெஜாரிட்டியை நிரூபிக்கும் வாய்ப்பு வந்தால், எப்படியும் பாஜகவுக்குதான் கிடைக்கும்.. அந்த சமயத்தில், என்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து 5 எம்எல்ஏக்களை பாஜக தங்கள் வசம் இழுத்துக் கொண்டால் கட்சித் தாவல் தடைச்சட்டத்தால் எதுவும் செய்ய முடியாது..

மெஜாரிட்டி
மெஜாரிட்டியையும் நிரூபித்து ஆட்சியை கைப்பற்றலாம் என்பதே இப்போதைக்கு பாஜகவின் ஐடியாவாக உள்ளதாம். அதற்கான முயற்சியிலும் இறங்கிவிட்டதாம்.. என்.ஆர்.காங்கிரஸில் யாரெல்லாம் பாஜக வலையில் விழ போகிறார்கள்? என்று தெரியவில்லை.. ஆஸ்பத்திரியில் ரங்கசாமி அட்மிட் ஆன நேரத்தில் 3 பேரை தட்டி தூக்கியது பாஜக.. இப்போது அடுத்த ஆபரேஷனில் குதித்துள்ளது.. இதை ரங்கசாமி எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து?












Click it and Unblock the Notifications