பாஜகவை வீழ்த்த ‘இந்தியா’ கூட்டணியின் பிளான் என்ன? ஒரே கொள்கை இதான்.. விளக்கும் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: மதவாதம் என்பதைத் தவிர பாஜகவிடம் வேறு கொள்கை எதுவும் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டமன்றத் தேர்தல், அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஆளும் பாஜகவுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது. இந்நிலையில், 'இந்தியா' கூட்டணியின் வியூகங்கள் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:

கேள்வி: வடக்கில் வலதுசாரிகளின் பெரும் பலமாக இருக்கும் இந்துத்வா அடிப்படையிலான ஒருங்கிணைப்பை உடைக்க வேண்டிய தேவை இருப்பதாகக் கருதுகிறீர்களா? இதனை உடைத்து வாக்குகளைப் பெற 'இந்தியா' கூட்டணியின் உத்தி என்ன?
முதல்வர் ஸ்டாலின் பதில்: மதவாதம் என்பதைத் தவிர பா.ஜ.கவிடம் வேறு கொள்கை எதுவும் இல்லை. ஆட்சிக்கு வந்தாலும், சாதனைகளைக் காட்டி வாக்குகளைப் பெற முடியவில்லை. வெறுப்பரசியலை வைத்தே வாக்கு பெற நினைக்கிறார்கள். ஆனால் 'இந்தியா' கூட்டணியின் வலிமை என்பது மதநல்லிணக்கம். நாங்கள் அரசியல் சட்டம் வரையறுக்கும் கொள்கைகளை நம்பி நிற்கிறோம். பன்முகத்தன்மை கொண்ட இந்திய மாநிலங்களின் உரிமைகளை மதித்தல், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மீது கவனம் குவித்தல் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து நிற்கிறோம்.
ஆகவே, பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிராக உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து, தேர்தல் களத்தில் உள்ள வெற்றி வாய்ப்புகளுக்கேற்ப கூட்டணிக் கட்சிகளிடையே விட்டுக் கொடுக்கும் தன்மையை ஏற்படுத்தி, மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவதே 'இந்தியா' கூட்டணியின் தேர்தல் உத்தி. அதில் வெற்றி பெற முடியும் என்பதை சமீபத்திய இடைத் தேர்தல்கள், கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல் போன்றவை காட்டியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
கேள்வி: வாட்ஸ்அப் போன்ற சமூகவலைத்தளங்களை பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தும் விதம் குறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது காலத்திற்கேற்ப டிஜிட்டல் ஊடகங்களைக் கையாளும் வியூகமா அல்லது அதிகார அத்துமீறலா? இது பற்றிய உங்களின் கருத்து என்ன?
முதல்வர் ஸ்டாலின் பதில்: 'வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி' என்பது பாஜகவின் பொய்ப் பரப்புரைகளுக்குப் பொதுமக்கள் வைத்துள்ள பெயர். டிஜிட்டல் ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் இவற்றில் ஊடுருவலையும் அதிகார பலத்தையும் பயன்படுத்துவது பா.ஜ.க அரசின் வழக்கமாக இருக்கிறது. சமூக வலை தளங்களிலும் இத்தகைய போக்குகள் நிலவுவதை வாஷிங்டன் போஸ்ட் வெளிப்படுத்தியுள்ளது. அதிகார அத்துமீறல்களை அம்பலப்படுத்துவதன் ஒரு கோணம்தான், சில ஊடக நெறியாளர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்கிற 'இந்தியா' கூட்டணியின் புறக்கணிப்பு நடவடிக்கை.
பத்திரிகைகள் - மீடியாக்கள் நடுநிலைமைக்குத் திரும்ப வேண்டும் என்பதே இதன் நோக்கம்! மற்றபடி டிஜிட்டல் மீடியா, சோஷியல் மீடியா போன்றவற்றில் பா.ஜ.க.வின் அதிகார அத்துமீறல்களை, பொய்ப் பரப்புரைகளை, அவிழ்த்து விடும் அவதூறுகளை முறியடிக்கும் வகையில் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
கேள்வி: INDIA கூட்டணியின் தற்போதைய நிலை என்ன? கூட்டணியை ஒருங்கிணைக்கும் அல்லது இயக்கும் விசையாக எது உள்ளது?
முதல்வர் ஸ்டாலின் பதில்: இண்டியா கூட்டணி முதல் சுற்றில் வெற்றியைப் பெற்றிருக்கிறது. கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் அந்த வெற்றி கிடைத்திருக்கிறது. பாஜகவின் 9 ஆண்டுகால ஜனநாயக விரோத, அரசியல்சட்ட விரோத, மக்கள் விரோத ஆட்சியே இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்திருக்கிறது. பா.ஜ.க.வுடன் இருக்கும் மற்ற நிழல் கூட்டணிகளான "அமலாக்கத்துறை", "வருமானவரித்துறை" போன்றவை மேலும் பல கட்சிகளை இந்தியா கூட்டணிக்கு வரவழைக்கும். அரசியல் சட்டமும் அதன் கொள்கைகளும், மக்களும்தான்தான் எங்கள் கூட்டணியை இயக்கும் விசை."
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications