Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லி சல்லியா நொறுங்கும் கணக்கு.. "குறி" வைத்த பாஜக.. கையில் எடுத்த 2 மேட்டர்கள்.. திமுகவுக்கு செக்?

டெல்டாவை குறி வைத்து காய் நகர்த்துகிறது தமிழக பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுக்கு 2 வகைகளில், தமிழக பாஜக செக் வைத்து அடுத்த மூவ் ஆரம்பித்துள்ளது.. விரைவில் அடுத்தடுத்த தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில், பாஜகவின் இந்த அதிரடிகள் தமிழக அரசியலை நிமிர வைத்து வருகின்றன.

இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், சுமூக சூழல் அவ்வளவாக இருந்து வருகிறதா என உறுதியாக தெரியவில்லை.. பாஜகவை கூட்டணியில் சேர்த்ததுதான் தங்களுக்கு ஒரு மைனஸ் என்ற கருத்து அதிமுகவில் பரவலாக உள்ளது.

காரணம், எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளதாலும், தங்கள் இருப்பிடத்தை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அதிமுகவை சூழ்ந்து உள்ளது.. சசிகலா நெருக்கடி, இரட்டை தலைமை விவகாரம், ஊழல் புகார்கள் என அதிமுக அடுத்தடுத்து சிக்கல்களில் சிக்கி கொண்டுள்ளதால், அதை சமாளிக்கவே அந்த கட்சிக்கு நேரம் போதவில்லை.

 சசிகலா

சசிகலா

அதேநேரத்தில் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக அவ்வளவாக தலையிடவும் விரும்பவில்லை... நடப்பதையெல்லாம் ஒதுங்கி நின்றே வேடிக்கை பார்த்து வருகிறது.. இதற்கு ஒரு காரணமும் உள்ளது.. தமிழக பாஜக அடிக்கடி ஒரு விஷயத்தை சொல்லி கொண்டே இருக்கிறது.. அதாவது தமிழ்நாட்டில் இனிமேல் திமுகவுக்கு மாற்று பாஜகதான்..

 அவமானம்

அவமானம்

திமுக Vs பாஜக என்ற நிலைதான் உருவாக போகிறது என்று முருகன் முதல் அண்ணாமலை வரை அடிக்கடி குண்டை தூக்கி போட்டு கொண்டிருக்கிறார்கள். அதற்கான காய் நகர்த்தலிலும்தான் அவர்கள் ஈடுபட்டும் வருகிறார்கள். பாரம்பரியம் மிக்க கட்சியான அதிமுகவுக்கு இது உச்சக்கட்ட அவமானமாகவும் உள்ளது.. காலம் காலமாக திமுக Vs அதிமுக என்றுதான் இந்த தமிழ்நாடு தேர்தல்களை சந்தித்து வந்து கொண்டிருக்கிறது என்றாலும், பாஜக தமிழகத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும், அதனால் தடுக்க முடியவில்லை..

மேகதாது

மேகதாது

இப்போதே வரப்போகும் எம்பி தேர்தலுக்கு பாஜக குறி வைத்து விட்டது.. அதற்கான சில திட்டங்களையும் தமிழக பாஜக கையில் எடுத்துள்ளது... கிராமப்புறங்களில் பாஜகவுக்கு அவ்வளவாக வலு இல்லை என்ற பேச்சு பரவலாக உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான்,கிராமப்புறங்களில் காலூன்ற தன் கவனத்தை திருப்பி வருகிறது.. அதேபோல, டெல்டா விவசாயிகளின் கவனத்தை ஈர்க்கவும் முயற்சி எடுத்துள்ளது.. ஏற்கனவே, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து, அண்ணாமலை தலைமையில் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

 வேளாண் சட்டம்

வேளாண் சட்டம்

இதைதவிர, வருகிற 25ம் தேதி ஒருநாள் முழுவதும் விவசாயிகளை பாஜவினர் நேரில் சந்தித்து பேசுவார்கள் என்றும், அப்போது வேளாண் சட்டம் விவகாரத்தில் அரசியல் கட்சியினர் வேண்டுமென்றே அரசியல் செய்வதால், அந்த சட்டம் குறித்து மக்களிடம் விளக்கமாக எடுத்துரைப்போம் என்றும் சொல்லி உள்ளார்.. அண்ணாமலை இப்படி சொல்வதில் இதில் 2 விஷயங்கள் கவனிக்கத்தக்கது..

அண்ணாமலை

அண்ணாமலை

ஒன்று, விவசாயிகளுக்கு எதிரானது பாஜக என்ற பிம்பம் உள்ளதால், அதை உடைக்க முயலும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு ஆதரவான கட்சி திமுகவை அல்ல, நாங்கள்தான் என்பதை வலிய புகுத்த நினைப்பதாகவும் கருதப்படுகிறது..

பாஜக

பாஜக

மற்றொன்று, டெல்டாவில் எப்போதுமே திமுகவுக்கு ஆதரவு அதிகம்.. கொங்கு கைவிட்டாலும் டெல்டா ஒருபோதும் திமுகவை கைவிட்டதில்லை.. அந்தவகையில், ஒரு மண்டலத்தை மொத்தமாக தன் பக்கம் திருப்பி வாக்குகளாக மாற்றும் பிளானைதான் பாஜக எடுத்துள்ளது.. அதேசமயம், எங்கெல்லாம் திமுகவை டேமேஜ் செய்ய முடியுமோ, அங்கெல்லாம் மறக்காமல் அக்கட்சியை விமர்சித்து வருவதையும் கைவிடவில்லை. வெள்ளை அறிக்கை முதல் பட்ஜெட் வரை, ட்வீட் போட்டு தாக்கி கொண்டுதான் இருக்கிறது.

 உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்

நேற்றுகூட, வேலூரில் அண்ணாமலை பேசியபோது, "உள்ளாட்சித்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் நோக்கத்தில் பணியாற்ற வேண்டும், பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக தான் அரசியலை செய்கிறோம்... 2024-ல் எம்பி தேர்தலில் பாஜகவை எதிர்த்து அரசியலை செய்ய எந்த பெரிய கட்சியும் இங்கு கிடையாது..

ஸ்டாலின்

ஸ்டாலின்

மாநில கட்சிகளான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மற்றும் ஸ்டாலினின் திமுக போன்ற கட்சிகள் தேசிய கட்சியாகும் நோக்கத்தில் உள்ளனர். ஸ்டாலின் துணை பிரதமர் குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கனவு காண்கிறார்.. இந்தியாவின் துணை பிரதமராக தான் ஆகிவிட்டு, தனது மகன் உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் முதல்வராக்க வேண்டுமென காய் நகர்த்தி வருகிறார்" என்றார். அண்ணாமலை பேசியதில் மீண்டும் அதே விஷயத்தை கவனித்தால் புரியும்.. திமுகவை மறக்காமல் டேமேஜ் செய்துள்ளதுடன், திமுகவுக்கு மாற்று பாஜக என்பதிலும் குறியாக இருப்பது தெரிகிறது..

அதிமுக

அதிமுக

அதுமட்டுமல்ல, ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலையே செய்கிறோம் என்பதை வெளிப்படையாகவே சொல்லி உள்ளதை திமுக கவனித்ததோ இல்லையோ, அதிமுக உன்னிப்பாக கவனித்திருக்கும் என்றே தெரிகிறது.. ஏனெனில், டெல்டா மாவட்டங்களில் மொத்தமுள்ள 41 தொகுதிகளில் 37 இடங்களில் வென்று திமுக டெல்டா மாவட்டங்களை தனது கோட்டை ஆக்கியுள்ளது. இது அதிமுகவுக்கு ஷாக்தான்.. எனவே, டெல்டாவை பலப்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே மா.செ.க்களிடம் வலியுறுத்தியும் உள்ளார்.

வாக்குகள்

வாக்குகள்

வரப்போகும் தேர்தலில் டெல்டாவில் வாக்குகளை பெருக்க, திமுகவும், அதிமுகவும் வேறு வேறு வகைகளில் திட்டமிட்டு வரும் நிலையில், அத்தனை மொத்த கணக்குகளையும் பாஜக தவிடுபொடியாக்கி விடுமா? பாஜகவின் முன்னெடுப்புகளை திமுக முறியடிக்குமா? அல்லது அதிமுக சொந்த பிரச்சனையில் இருந்து விலகி, டெல்டாவில் கவனம் செலுத்துமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

பலன் தருமா?

பலன் தருமா?


அதேசமயம், பாஜகவுக்கு இது எந்த அளவுக்கு வெற்றியை பெற்று தரும் என்றும் சொல்வதற்கில்லை.. காரணம், பாஜக நினைத்ததை இதுவரை அப்படியே சாதிக்க முடியவில்லை, தேர்தலுக்கு முன் முன்னெடுத்த வேல் யாத்திரை, மேகதாது உண்ணாவிரதமும் பிசுபிசுத்து போனது... அதுவும் இல்லாமல், அண்ணாமலை பேசுவதை, சொல்வதையெல்லாம் அவர்கள் கட்சிக்காரர்கள் எந்த அளவுக்கு கடைபிடிப்பார்கள் என்றும் தெரியாது. எல்.முருகன் மற்றொரு பக்கம் தனியாக யாத்திரை தொடங்கப் போகிறார். கடந்தமுறை டெல்டாவில் பெரிதாக சாதிப்போம் என கருப்பு முருகானந்தம் முதல் பலரும் முயற்சி செய்ததும் நிறைவேறவில்லை என்பதும் நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+