"கறுப்பு நாள்.." அரசியல் சாசனத்திற்கு எதிரானது! 10% இட ஒதுக்கீடு தீர்ப்பு பற்றி திமுக ராஜீவ் காந்தி
சென்னை: 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இது குறித்து திமுகவின் ராஜீவ் காந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது.
பல மாநில அரசுகள் இந்த இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மத்திய அரசின் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துவிட்டது.

சுப்ரீம் கோர்ட்
பாஜக ஆளும் மாநிலங்களிலும் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துவிட்டது. இருப்பினும், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதில் 4 நீதிபதிகள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் ஒரு நீதிபதி எதிராகவும் தீர்ப்பு அளித்தார்.

கறுப்பு நாள்
இது குறித்து திமுகவின் ராஜீவ் காந்தி கூறுகையில், "சமூக நீதி இயக்கத்திற்குக் கறுப்பு நாள்.. இந்த தீர்ப்பு சட்டப்பிரிவு 15,16க்கு எதிரானது. சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் தெளிவாகச் சொல்லியுள்ளது.

எதிரானது
ஆனால், பாஜக அரசு இப்போது பொருளாதார ரீதியால் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து உள்ளது இது அரசியல் சாசனம் மற்றும் சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு.. இந்த விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி திமுக ஆலோசிக்கும். அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இருப்பினும், இன்றைய தினம் சமூக நீதிக்கும் அரசியலமைப்பிற்கும் கறுப்பு நாள்..

அம்பேத்கர்
அம்பேத்கர் தொகுதிகளில் (தனித்தொகுதிகள்) இருக்கும் இட ஒதுக்கீடு மட்டுமே குறிப்பிட்ட ஆண்டுகள் இருந்தால் போதும் எனக் கூறியுள்ளார். அவர் வேலை மற்றும் கல்வியில் எத்தனை ஆண்டுகள் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பது குறித்து எதுவும் கூறவில்லை.












Click it and Unblock the Notifications