டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கி குடித்தவர் மூக்கிலிருந்து குபீரென்று வந்த ரத்தம்.. பெரும் பரபரப்பு
சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடையில் மது வாங்கி குடித்த மது அடிமைக்கு, மூக்கில் ரத்தம் வந்ததால், சக மது அடிமைகள் பீதியில் உள்ளனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்திற்குட்பட்ட விருகாவூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.

இந்த மதுபான கடையில் முடியனுர் கிராமத்தைச் சேர்ந்த சாமித்துரை என்பவர் மகன் செந்தில் என்பவர் இன்று மதியம், ரூ.150 மதிப்புள்ள மதுபானம் ஒன்றை வாங்கி குடித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மது குடித்த உடனே மூக்கிலிருந்து அவருக்கு ரத்தம் பீறிட்டு வடிந்துள்ளது. இதைக் கண்டு செந்தில் அச்சமடைந்து உள்ளார். எனவே சக குடிகாரர்கள், தங்கள் மதுப்பாட்டிலை மேலும் கீழும் உற்று பார்த்துள்ளனர். அப்போது ஒவரிடம் இருந்த மதுபான பாட்டிலில் குப்பை மற்றும் பூச்சி இருந்தாக சொல்லப்படுகிறது.
இதனால் பயந்துபோன செந்தில் சேல்ஸ்மேனிடம் இதுபற்றி கேட்டுள்ளார். ஆனால் அங்கு வாக்குவாதம் ஏற்படவே பரபரப்பு நிலவியது. இதனால் வரஞ்சரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் மோதல் ஏதும் நடக்காமல் இருக்க மதுபான கடையை மூடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் மூக்கில் ரத்தம் வரப்பட்ட செந்தில் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மதுபானம் குடித்தவருக்கு மூக்கிலிருந்து ஏன் ரத்தம் வந்தது என்பது மர்மமாக இருக்கிறது. இது தொடர்பாக மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதனிடையே, சேலத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் ஆகியவை மாலை 6 மணிவரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. முன்னதாக, டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தது.
கொரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து சேலம் மாநகரத்திற்குட்பட்ட மதுபான சில்லரை விற்பனை கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும் என சேலம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
-
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications