உயிர் காக்கும் ரத்தம்.. கெருகம்பாக்கம் கே.கே பார்மஸி கல்லூரியில் ரத்த தானம் அளித்த மாணவர்கள்
சென்னை: உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு சென்னை போருர் அருகில் கெருகம்பாக்கம் கே.கே பார்மஸி கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்று ரத்த தானம் அளித்தனர்.
பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உயிரைக் காக்கும் இரத்ததானத்திற்காக பணம் செலுத்தப்படாத இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் ஜூன் 14 அன்று உலக இரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டில் உலக சுகாதார சபையால் முதன்முதலில் இந்த நாள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டது, அது முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 'இரத்தம் கொடு, பிளாஸ்மா கொடு, வாழ்க்கையைப் பகிர்ந்துகொள், அடிக்கடி பகிர்ந்துகொள்' என்பது இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருள்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ரத்த தான முகாமிற்கு, கே.கே.பார்மசி கல்லூரியின் முதல்வர் டாக்டர்.மீனா தலைமை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர்.சாந்தி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் ரத்த தானம் செய்வதின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விவரிக்கப்பட்டது.
ஒவ்வொரு இரண்டு வினாடிக்கும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. இரத்தத்தை உற்பத்தி செய்ய முடியாது. இது தாராள மனப்பான்மையுள்ள நன்கொடையாளர்களிடமிருந்து மட்டுமே வர முடியும். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியனுக்கும் அதிகமான இரத்த தானம் செய்யப்படுகிறது.
அமெரிக்காவில், ஒவ்வொரு இரண்டு வினாடிகளுக்கும் இரத்த தானம் தேவைப்படுகிறது. ஒரு யூனிட் ரத்தம் மூன்று உயிர்களைக் காப்பாற்றும். கே.கே.பார்மசி கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் ஏராளமானோர் பங்கேற்று ரத்த தானம் அளித்தனர்.
"ஒரு உயிருக்கு முக்கியமாக இருப்பது ரத்தம் தான். ரத்த ஓட்டம் நிற்கும் போது அல்லது குறையும் போது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உண்டாகும். ஆகவே, ஒரு உயிரைக் காப்பதில் ரத்தத்தின் பங்கு அவசியம் ஆகிறது. உலக உயிர்கள் உயிர் வாழ தண்ணீர் எவ்வளவு அவசியமோ, அதைவிட அவசியமானது ரத்தம். உலகில் வாழும் பிற உயிர்களிடம் இல்லாத ஒரு விஷயம் ரத்தக்கொடை.
மனிதர்களை தவிர்த்து வேறு எந்த ஜீவராசிகள் விபத்தாலோ வேறு சில சூழல்களாலோ ரத்தத்தை இழக்கக்கூடிய சூழல் வந்தால் அதற்கு வேறு ஒரு உயிருடைய ரத்தத்தை கொடுத்து உயிரை காப்பது இயலாத காரியம். மனிதர்களுக்கு மட்டுமே, ஒரு மனிதருக்கு மற்றொரு மனிதரின் ரத்தத்தை கொடுக்கலாம்" என்று ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்தும் விவரிக்கப்பட்டது.
கே.கே., பார்மசி கல்லூரியின் கல்வி நிலையத் தலைவர் டாக்டர்.செந்தில்குமரன் மேற்பார்வையில், கல்லூரியில் பயிலும் 56 மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர். அவர்களை ஊக்குவித்து பாராட்டும் விதமாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ரத்ததானம் வழங்கிய மாணவர்கள், மீண்டும் இதே போல தொடர்ச்சியாக வழங்க உள்ளதாகவும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications