ப்ளூ கலர் பழம் உங்க தட்டில் இருக்கா? நீல நிற உணவுகள் நினைவாற்றலைத் தூண்டும்.. யாரெல்லாம் சாப்பிடலாம்
சென்னை: இயற்கையின் படைப்பில் வண்ணமயமான காய்கறிகளும் பழங்களும் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான மருத்துவ குணத்தை தன்னுள் கொண்டுள்ளன.. குறிப்பாக நீலம் மற்றும் ஊதா நிறத்தில் இருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக பார்க்கப்படுகின்றன.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
நீல வகை காய்கள், பழங்கள் நிறத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது அதிலுள்ள அந்தோசயனின் எனப்படும் ஒரு வகை தாவர நிறமி ஆகும்.. இது ஒரு மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்பது குறிப்பிடத்தக்கது..

நீல நிற உணவுகள்
பொதுவாக நாம் அன்றாட வாழ்வில் பார்க்கும் கத்தரிக்காய், நாவல் பழம், நீல திராட்சை, ஊதா முட்டைக்கோஸ், கருநீல பிளம்ஸ், ஊதா நிற கேரட் மற்றும் புளுபெர்ரி போன்றவை இந்த வகையை சேர்ந்தவை.. இந்த உணவுகள் ஒவ்வொன்றும் தனித்துவமான சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளன..
இந்த நீல நிற உணவுகளில் வைட்டமின் C, வைட்டமின் K மற்றும் வைட்டமின் A ஆகிய சத்துக்கள் மிக அதிக அளவில் காணப்படுகின்றன.. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.. நார்ச்சத்து நிறைந்த இந்த உணவுகள் செரிமான மண்டலத்தை பலப்படுத்துவதுடன் தேவையற்ற கொழுப்பை எரிக்கவும் துணைபுரிகின்றன..
புளூ கலர் பழங்கள்
குறிப்பாக நாவல் பழம் போன்ற உணவுகளில் இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன.. இவை ரத்த சோகையை நீக்கி உடலில் ஆக்சிஜன் ஓட்டத்தை சீராக்க உதவுகின்றன..
நீல நிற உணவுகளின் மிக முக்கியமான மருத்துவ குணம் என்னவென்றால் அவை உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்கின்றன.. இதயத் துடிப்பை சீராக்குவதுடன் இதயத் தசைகளுக்கு வலுவூட்டும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.. மேலும் மூளையின் செல்களுக்கு புத்துயிர் அளித்து நினைவாற்றலை மேம்படுத்துவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.. புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும் கவசமாகவும் இந்த அந்தோசயனின் சத்துக்கள் செயல்படுகின்றன..
யாரெல்லாம் இதை சாப்பிடலாம்
யார் யாரெல்லாம் இதைச் சாப்பிடலாம் என்று பார்த்தால், வளரும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தாராளமாக உட்கொள்ளலாம்.. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை விரும்பி உண்ணலாம்.. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது..
அதேபோல் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் நீல நிறப் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகச் சிறந்த தீர்வாகும்.. இந்த நிற பழங்களும், காய்கறிகளும் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி இளமையைத் தக்கவைக்க உதவுகின்றன.. எனவே ஆரோக்கியமான வாழ்வுக்கும் பொலிவான தோற்றத்திற்கும் வாரத்தில் குறைந்தது 3 முறையாவது ஒரு நீல நிற உணவை நம் தட்டில் இடம் பெறச் செய்வது மிக அவசியமான ஒன்றாகும்..
நீல கலர் உணவுகள்
பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் அதிக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்களின் உணவுப் பட்டியலில் இதை அவசியம் சேர்க்க வேண்டும்.. சிறுநீரகப் பாதை தொற்று உள்ளவர்களுக்கு நீல நிறப் பழங்கள் மிகச்சிறந்த நிவாரணியாக அமைகின்றன.. இருந்தாலும் சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் சில வகை ஊதா நிற உணவுகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது..
தொடர்ச்சியாக கணினி மற்றும் அலைபேசி பயன்படுத்துவோர் கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க இந்த வகை உணவுகள் உதவுகின்றன.. சருமத்தின் மென்மையையும் இளமையையும் காக்க விரும்புவோருக்கு இது ஒரு இயற்கை மருந்தாகும்.. எனவே நமது அன்றாட உணவில் ஏதாவது ஒரு நீல அல்லது ஊதா நிற உணவைச் சேர்த்துக் கொள்வது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த முதலீடாக அமைகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications