“காலில் விழுந்த காலா”..ப்ளூ சட்டை மாறனுக்கு கன்டென்ட் தந்த ரஜினி -யோகி காலில் விழுந்தது பற்றி ட்வீட்
சென்னை: உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இதனை கடுமையாக சாடி இருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசை பெற்ற 'தலைவர்'. ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், தமிழ் நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச முதலமைச்சரை கைகளை கூப்பி வாழ்த்துவதைக் காணலாம், பின்னர் அவர் கால்களைத் தொட கீழே குணிகிறார்.

சனிக்கிழமை லக்னோவில் அவர் உள்ள உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் சந்தித்தபோது முதல்வர் பாதங்களைத் தொட்டார். உங்கள் புகழுக்கும், உயரத்திற்கும் இந்த சறுக்கல்கள் தேவையா ரஜினிகாந்த்? ஒவ்வொரு பிரபலத்திற்கும் இறுதிக்கால வரலாறு முக்கியம். இதை உணரவே மாட்டீர்கள் போல.
யோகி ஆதித்யநாத் வயது 51. ரஜினிகாந்த் வயது 73. கடந்த சில வாரங்களாக கபாலிக்கு சொம்பு தூக்கிய திருப்பூர் சுப்பு, செய்யாறு, ரமேஷ் பாலா, பணஞ்செயன் மற்றும் திரையுலக அட்டகத்திகளை, மாய்ந்து மாய்ந்து பேட்டி எடுத்த செய்தி மற்றும் யூடியூப் சேனல்களே.. இவர்களை மீண்டும் பேட்டியெடுங்கள்.
'காலில் விழுந்த காலா' பற்றி கருத்து கேளுங்கள். அதற்கு அவர்கள் எப்படி ஈயம் பூசுகிறார்கள் என்பதை உலகம் பார்க்கட்டும். எனது புகைப்படத்தை தம்ப்நெயிலாக வைத்து 'ப்ளூ சட்டையை கிழித்த' என்று பல்வேறு வீடியோக்கள் போட்டு வஞ்சத்தை தீர்த்தீர்களே? அதுதானா உங்கள் சேனல்களின் தரம்? நன்கு யோசியுங்கள்.
என்னை கரித்துக்கொட்டி, கெட்ட வார்த்தை பேசும் டம்மி பீஸ்களின் பேட்டிகளால்.. நான் 1% கூட அசரப்போவதில்லை. எல்லாமே வீணான முயற்சி. இதை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் நோக்கமும் விருந்தினரின் மலிவான நோக்கங்களையும் பகிரங்கப்படுத்தப்படும். யார் சரியானவர் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள்.
கொஞ்சமாவது முதிர்ச்சி உள்ள நெறியாளர்களை வேலைக்கு எடுங்கள். அவர்களும் ஹீரோக்களின் முரட்டு ஜால்ராக்களாக இருப்பது கண்ணியமான மீடியா தொழிலுக்கே பேரவமானம்." என்று குறிப்பிட்டு உள்ளார். ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மெகா ஹிட்டாகியுள்ள நிலையில் கடந்த வாரம் படம் ரிலீசுக்கு முன் இமயமலை சென்றார் ரஜினிகாந்த்.
அதன் பின் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சென்ற அவர், அங்கு ஆளுநராக இருக்கும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை ஆளுநர் மாளிகை சென்று சந்தித்தார். அதை தொடர்ந்து நேற்று உத்தரப்பிரதேசத்துக்கு சென்ற ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசுகையில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படம் பார்க்கப்போவதாக தெரிவித்தார்.

ஆனால், யோகி ஆதித்யநாத் ரஜினியுடன் ஜெயிலர் படத்தை பார்க்க விரும்பவில்லை என்று தகவல் வெளியானது. அவருக்கு பதிலாக உபி துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா ரஜினிகாந்துடன் திரைப்படம் பார்த்தார். அவரும் படம் முழுவதையும் பார்க்காமல் பாதியிலேயே அங்கிருந்து எழுந்து சென்றார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் லக்னோவில் உள்ள யோகி ஆதித்யநாத் வீட்டுக்கு சென்றார். தன்னை வரவேற்க வீட்டு வாசலில் நின்ற யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினிகாந்த் ரஜினிகாந்த் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அவரை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications