தலைவருக்கு விஜய் மேல காண்டு.. காக்கா, கழுகு கதை சொல்லி கதறி! இப்போ ‘அவரோடு’ கூட்டு! பிரபலம் சுளீர்!
சென்னை: தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தை எதிர்பார்த்து இருக்கிறார். இந்நிலையில், விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் தன் மீதான ஊடக வெளிச்சம் வேண்டும் என்பதற்காக அண்ணாமலையுடன் சேர்ந்து விஜயை வீழ்த்த திட்டமிட்டு இருப்பதாக விமர்சித்திருக்கிறார் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். சின்ன குழந்தைகளை கேட்டால் கூட சூப்பர் ஸ்டார் யார் என்று சொல்லிவிடும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரோல் மாடலாக கொண்டு சினிமாவில் உயரத்துக்கு வந்தவர் விஜய். பல இடங்களில் ரஜினிகாந்த் தனது ரோல் மாடல் என அவரே குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்திய அரசியல் என்ட்ரி காரணமாக விஜய் ஊடகங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறார். அறிக்கை விட்டாலும் சரி, ரோட் ஷோ நடத்தினாலும் சரி விஜய்க்கு முக்கியத்துவம் தருகின்றன ஊடகங்கள். மேலும் சமூக வலைதளங்களிலும் விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவு வட்டம் இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அதிகமான பாஜக ஆதரவு அரசியல் நிகழ்வுகளில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வருகிறார். குறிப்பாக சனாதனம் மற்றும் தேசியம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். தன்னை எதிர்த்த சீமானை சந்தித்தது மற்றும் பாஜக நிர்வாகிகள் உடனான நெருக்கம் ரஜினிகாந்தின் போக்கு குறித்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது. ஏற்கனவே அரசியலுக்கு வருவதாக கூறி திடீரென அதற்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில் ரஜினிகாந்த் மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு ஆர்வம் காட்டுவது ஏன் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்தது.
இந்த நிலையில் விஜய்யை வீழ்த்த அண்ணாமலையுடன் நடிகர் ரஜினிகாந்த் கைகோர்த்து இருப்பதாக விமர்சித்திருக்கிறார் பிரபல சினிமா விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," நாம் முன்பே சொல்லி வந்தது போல சினிமா வியாபாரத்தில் தன்னை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த விஜய் மீது தலீவருக்கு நீண்டகாலமாக காண்டு உண்டு. அதனால் தான் காக்கா, கழுகு கதை சொல்லி கதறினார். என் பட்டத்தை பறிக்க நூறு பேரு என பதறினார்.
இதுபோக வரும் தேர்தலில் விஜய் வெற்றி பெற்று விட்டால் தலீவரால் சத்தியமாக தாங்கிக் கொள்ளவே இயலாது எனவும் குறிப்பிட்டிருந்தோம். இதோ.. தற்போது தனது குள்ளநரி தந்திர வேலைகளை ஆரம்பித்து விட்டார் தலீவர். அண்ணாமலையை தனிக் கட்சி ஆரம்பிக்க வைப்பதன் பின்னணியில் தலீவர் உள்ளதாக தமிழா பாண்டியன் கூறியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு.. தமிழகத்தை ஆள ஒரு இளைஞர் வரப்போகிறார் என தலீவர் குறிப்பிட்டார். அதன்பிறகு பாஜகவின் தலைவரானார் அண்ணாமலை.
தற்போது.. பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு.. தலீவருக்கு பிடித்த இமயமலை பாபா குகையில் அண்ணாமலை வழிபட்ட ஃபோட்டோ வெளியானது. இவர் தனக் கட்சி ஆரம்பித்து ஓரளவு வாக்கு வங்கி பெற்றதும்.. மீண்டும் பாஜகவில் இணைந்து விடுவார். இது தான் தலீவரின் மாஸ்டர் ப்ளான். துகுறித்து மேலும் பல தகவல்களை கூறியுள்ளார் பாண்டியன். வழக்கம் போல தலீவரின் இந்த ராஜதந்திரமும் வீணாகப்போவது உறுதி." என கூறியுள்ளார்.
-
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications