ஜெயித்த குதிரை மீது சவாரி.. ரஜினி தந்திரம்! இளம் டைரக்டர்களை ஏமாத்துவாரு..ப்ளூ சட்டை மாறன் விளாசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குதிரையை ஜெயிக்க வைப்பதை விட.. ஜெயித்த இளம் குதிரை மீது சவாரி செய்து ஜெயிப்பதுதான் தலீவரின் புது பாலிசி. அதனால்.. அறிமுக இயக்குனர்களை கண்டுகொள்ளவே மாட்டார் என நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக சீண்டியுள்ளார் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்.

தமிழ் திரை உலகில் பல தசாப்தங்களாய் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் சினிமாவில் அறிமுகமான அவர் அதற்குப் பிறகு ரஜினி யுகத்தையே திரை உலகில் உருவாக்கினார் என்று தான் சொல்ல வேண்டும்.

Blue Sattai Maran Rajinikanth cinema

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். சினிமாவில் ரஜினி படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சாதனையை செய்யும். ரஜினிக்கு பிறகு பல தலைமுறை நடிகர்கள் வந்துவிட்டாலும் இன்னும் சூப்பர் ஸ்டாராகவே ரஜினிகாந்த் தொடர்கிறார்.

மேலும் மற்ற நடிகர்களை பாராட்டுவதும், புதிய படங்களின் இயக்குனர்களை பாராட்டுவதும் ரஜினிகாந்தின் வழக்கம். ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றால் உடனடியாக அந்த இயக்குனரை நேரில் அழைத்தோ அல்லது தொலைபேசியில் அழைத்தோ ரஜினிகாந்த் பாராட்டுவார். மேலும் எனக்காக ஒரு கதை சொல்லுங்கள் எனவும் சொல்லுவார்.

அப்படி பல இயக்குனர்களுடன் குறிப்பாக இளம் இயக்குனர்களுடன் ரஜினிகாந்த் வேலை பார்த்து இருக்கிறார். அந்த வகையில் பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல இளம் இயக்குனர்களுடன் அவர் பணியாற்றி இருக்கிறார். அதே நேரத்தில் புது இயக்குனர்களின் படங்களில் அவர் நடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

Blue Sattai Maran Rajinikanth cinema

இந்நிலையில், அறிமுக இயக்குனர்களை கண்டு கொள்ளவே மாட்டார் என நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக சீண்டியுள்ளார் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," குதிரையை ஜெயிக்க வைப்பதை விட.. ஜெயித்த இளம் குதிரை மீது சவாரி செய்து ஜெயிப்பதுதான் தலீவரின் புது பாலிசி. அதனால்.. அறிமுக இயக்குனர்களை கண்டுகொள்ளவே மாட்டார். லேட்டஸ்டாக வெளியாகும் ஹிட் படங்களை பார்த்துவிட்டு.‌ அந்த இளம் இயக்குனர்களை வீட்டிற்கு அழைத்து பாராட்டுவார். அப்படத்தில் மக்கள் ரசித்த வில்லன் அல்லது கேரக்டர் ரோலை எனக்கு தந்திருந்தால் நான் நடித்திருப்பேனே என்பார்.

உதாரணம்: ஜூகர்தண்டா பாபி சிம்மா கேரக்டர். ஆனால் ஹீரோவாக மட்டுமே நடிப்பார். பிறகு‌‌.. எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க எனக் கூறுவார். இதை நம்பி பல இளம் இயக்குனர்கள் வேலை செய்வார்கள். பிறகு அதை இன்னும் டெவலப் பண்ணிட்டு வாங்க என அனுப்பி வைப்பார். சிலபல மாதங்கள் கழித்து அவர்கள் மீண்டும் வருவார்கள். அதற்குள் வேறு சில படங்கள் ஹிட்டாகி.‌ ட்ரெண்ட் மாறியிருக்கும். இவர்களை எல்லாம் கழற்றி விட்டு.. அவர்களை அழைத்து பாராட்டி.. கதை பண்ண சொல்வார்.

டான் இயக்குனர் சிபி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தேசிங்கு பெரியசாமி, மாரி செல்வராஜ், பிரதீப் ரங்கநாதன் என பட்டியல் நீளும். இப்போது டிராகன் நன்றாக ஓடுவதால்.. அந்த இயக்குனரை அழைத்து பாராட்டுவார். மிஷ்கின் நடிச்ச கேரக்டரை எங்கிட்ட‌ சொல்லி இருந்தா .‌நான் நடிச்சி இருப்பேனே என சொல்வார். எனக்கு ஒருகதை ரெடி பண்ணுங்க என்பார். ரிப்பீட்டு!!" என கூறியுள்ளார்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+