நீட் இல்லாமல் டாக்டராகணுமா? மருத்துவ சேவை செய்யணுமா?.. BNYS விண்ணப்பியுங்க.. கடைசி நாள் அக். 17
சென்னை: யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ஆகும்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறையில் யோகா, தியானம், ஆசனங்கள், இயற்கையான முறையிலான மருத்துவம் உள்ளிட்டவை மூலம் மலட்டுத்தன்மை, ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய், நாள்பட்ட குறிப்பிட்ட நோய்களை குணப்படுத்தலாம்.
இன்றைய நிலையில் மருத்துவக் கனவுடனும் ஏழைகளுக்கு சேவை செய்யும் லட்சியத்துடனும் நிறைய மாணவர்கள் கனவு காண்கிறார்கள். ஆனால் அவர்களின் கனவுகள் நீட் எனும் தேர்வு மூலம் பொசுக்கப்படுகின்றன.
எம்பிபிஎஸ் படித்தால் மட்டும்தான் மருத்துவர் என்றில்லை. அதற்கு இணையான நிறைய கோர்ஸ்கள் உள்ளன. பல் மருத்துவம், பிசியோதெரபி, சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகியவை ஆகும். அந்த வகையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவமும் உள்ளது. இதை ஆங்கிலத்தில Bachelor of Naturopathy and Yogic Science (BNYS) என்பார்கள்.
பொதுவாக இந்த படிப்புகளுக்கு ஆயுஷ் அமைச்சகத்திலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எம்பிபிஎஸ் படித்தால் எத்தகைய சேவைகளை செய்யலாமோ அத்தனை சேவைகளும் இந்த மருத்துவம் படித்தாலும் செய்யலாம். இதெல்லாம் நம் பாரம்பரிய மருத்துவமாகும்.
யோகா மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் படிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் சென்னையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tnhealth.tn.gov.in எனும் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரை இந்த இணையதள முகவரியில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த படிப்புக்கு நீட் தேர்வே தேவையில்லை. பிளஸ் 2வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையிலேயே சீட் வழங்கப்படும்.
தமிழகத்தில் அரசு கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளிலும் இந்த படிப்பை படிக்கலாம். தமிழகத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கென 19 கல்லூரிகள் உள்ளன. இந்தப் படிப்பை படிக்க தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப படிவத்தின் கட்டணம், கல்லூரி கட்டணம், கவுன்சலிங் உள்ளிட்ட தகவல்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் 19ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆகும் (19.10.2022).
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் அதில் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களையும் அனுப்ப வேண்டிய முகவரி
The Secretary,
Selection Committee, Directorate of Indian Medicine and Homeopathy,
Chennai- 600106.












Click it and Unblock the Notifications