மது போதை! சென்னை கத்திப்பாராவில் பாபி சிம்ஹாவின் சொகுசு கார் விபத்து! 3 பேர் காயம்!
சென்னை: சென்னை கத்திப்பாரா பகுதியில் சொகுசு காரில் வந்து விபத்தை ஏற்படுத்தியதாக நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் கார் ஓட்டிய போது மதுபோதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

நடிகர் பாபி சிம்ஹாவின் வீடு சென்ன மணப்பாக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் அவருடைய தந்தை ஒரு இடத்திற்கு செல்ல, சொகுசு காரில் ஓட்டுநர் புஷ்பராஜுடன் சென்றார்.
அப்போது பாபியின் தந்தையை அவர் சொன்ன இடத்தில் இறக்கிவிட்ட புஷ்பராஜ் மீண்டும் மணப்பாக்கத்திற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கத்திப்பாரா பகுதியில் கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் பாபி சிம்ஹாவின் காரின் முன் பகுதி நொறுங்கியது.
3 பேர் காயம்
இந்த விபத்தில் அந்த வழியாக பயணம் செய்த 3 பேர் காயமடைந்தனர். 6 பேரின் வாகனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் அந்த கார் பாபி சிம்ஹாவுக்கு சொந்தமானது என தெரியவந்தது.
டிரைவரை விசாரித்த போலீஸ்
மேலும் டிரைவரை விசாரித்த போது அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று இரவு போலீஸார் கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த பாபியின் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
யார் இந்த பாபி சிம்ஹா
ஜெய சிம்ஹா எனும் நடிகர் பாபி சிம்ஹா தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பின்னர் சூது கவ்வும் படத்தில் ஒரு கடத்தல்காரனாகவும் நடித்திருந்தார். பின்னர் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா படத்தில் கேங்ஸ்டர் சேதுவாக நடித்திருந்தார். இவருக்கு இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றுத் தந்தது.
பேட்ட
பாபி சிம்ஹா பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். அது போல் மகான், வால்டர் வீரய்யா, இந்தியன் 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் உறுமீன் படத்தில் தன்னுடன் நடித்த ரேஷ்மி மேனனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
கொடைக்கானல்
கொடைக்கானலில் நடிகர் பாபி சிம்ஹா அனுமதி பெறாமல் விதிகளை மீறி பங்களா கட்டிவருவதாக கடந்த 2023 ஆம் ஆண்டு சர்ச்சை எழுந்தது. இது குறித்து விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் பேத்துப்பாறை ஊர் தலைவர் புகார் அளித்திருந்தார்.
வில்பட்டி பஞ்சாயத்து
வில்பட்டி பஞ்சாயத்துக்குள்பட்ட பகுதியில் நடிகர் பாபி சிம்ஹா ஒரு ஏக்கர் நிலம் வாங்கியிருந்தார். அந்த நிலத்தில் விதிகளை மீறியும் கட்டட வரைப்படம் கொடுத்து முறையான மின் இணைப்பையும் பெறவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
பாபி சிம்ஹா பேட்டி
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் பாபி சிம்ஹா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: கொடைக்கானல்- பழனி சாலையில் பெருமாள் மலையை அடுத்து உள்ள வில்பட்டி ஊராட்சி பகுதியின் பேத்துப்பாறையில் எனது பெற்றோருக்காக வீடு கட்டினேன். இதற்காக 1.70 கோடி ரூபாய் கொடுத்தேன். இதில் ஒப்பந்ததாரர் என்னை ஏமாற்றிவிட்டார்.
விதிகள் மீறவில்லை
நான் போலியாக பட்டா வைத்து விதிமுறைகளை மீறி கட்டியதாகவும் என் மீது குற்றம் சாட்டுகின்றனர். மின்சார இணைப்பு இல்லை என்றும் கூறுகின்றனர். சரியான ரெக்கார்டுகள் அனைத்தும் என்னிடம் உள்ளன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications